கொரோனா தடுப்பூசி விலை ரூ. 10,800 – சீனா அறிவிப்பு!!

0

சினோபார்ம் என்கிற சீன நிறுவனம் தனது கொரோனா தடுப்பூசி இந்த ஆண்டு இறுதிக்குள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தயாராக இருக்கக்கூடும் என்று கூறியுள்ளது. ஒழுங்குமுறை ஒப்புதல் பெறுவதற்காக ஐக்கிய அரபு அமீரகத்தில் மனிதர்களுக்கு செலுத்தி தடுப்பூசி பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

கொரோனா தடுப்பூசி:

சீனா தேசிய மருந்துக் குழுவின் (சினோபார்ம்) ஒரு பிரிவினால் உருவாக்கப்படும் கொரோனா வைரஸ் தடுப்பூசி தயாரிப்பு செலவு 1,000 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.10,800) இருக்கும் என அதன் தலைவர் லியு ஜிங்ஜென் கூறினார். இதன் விலை மிக அதிகமாக இருக்காது. இரண்டு டோஸ் தடுப்பூசி ரூ.10,800 ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்து உள்ளார்.

COVID-19 தடுப்பூசியை உருவாக்க உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களும் மருந்து தயாரிப்பாளர்களும் தீவிர பரிசோதனையில் உள்ளனர். மனித மருத்துவ பரிசோதனைகளில் 20 க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

corona vaccine
corona vaccine

மாடர்னா இன்க் நிறுவனம் இந்த மாத தொடக்கத்தில் அதன் சோதனை தடுப்பூசியின் சிறிய அளவுகள் ஒரு டோஸுக்கு ரூ.2,800 வரை விலை இருக்கும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று கூறினார். கடந்த மாதம், அமெரிக்க பயோஎன்டெக் எஸ்இ உருவாக்கப்பட்ட ஒரு சோதனை தடுப்பூசி 4000 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

சைனோஃபார்ம் பிரிவான சீனா நேஷனல் பயோடெக் குழு (சி.என்.பி.ஜி) ஒரே முறையைப் பயன்படுத்தி இரண்டு தடுப்பூசிகளை மனித சோதனைகளுக்கு உட்படுத்தி உள்ளது. வுஹான் மற்றும் பெய்ஜிங்கில் உள்ள அதன் உற்பத்தி நிலையங்கள் இணைந்து ஆண்டுக்கு இரண்டு மில்லியனுக்கும் அதிகமான தடுப்பு மருந்துகளை உருவாக்கக்கூடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here