செமஸ்டர் கட்டணங்களை செலுத்த நிர்பந்திக்கும் அண்ணா பல்கலைக்கழகம் – உயர்நீதிமன்றத்தில் வழக்கு!!

0
Anna University
Anna University

அண்ணா பல்கலைக்கழக மாணவர்களை செமஸ்டர் கட்டணங்களை குறிப்பிட்ட தேதிக்குள் செலுத்தக் கோரியும், தவறினால் அபாரதத்துடன் செலுத்த வேண்டும் என கூறி பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருந்தது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.

செமஸ்டர் கட்டணங்கள்:

கொரோனா பாதிப்பு காரணமாக 5 மாதங்களுக்கு மேலாக கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளன. இந்நிலையில் ஆகஸ்ட் – நவம்பர் செமஸ்டர் கட்டணத்தை ஆகஸ்ட் 30ம் தேதிக்குள் செலுத்துமாறு அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டு இருந்தது. தவறிய பட்சத்தில் அபாரதத்துடன் செப்டம்பர் 5ம் தேதிக்குள் கட்டணத்தை செலுத்த வேண்டும் என சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும் குறிப்பிட்ட தேதிக்குள் கட்டணத்தை செலுத்தாத மாணவர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டு இருந்தது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

madras high court
madras high court

கொரோனா ஊரடங்கால் பல மாதங்களாக கல்லூரிகள் செயல்படாத போதிலும் செமஸ்டர் கட்டணங்களை செலுத்த நிர்பந்திப்பது நியாயமானது இல்லை என பலரும் கருத்து தெரிவித்தனர். அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த நடவடிக்கையை எதிர்த்து இந்திய மாணவர் சங்க செயலாளர் மாரியப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவில், 40% கட்டணத்தை தவிர்த்து ஊரடங்கு சமயத்தில் மாணவர்கள் பயன்படுத்தாத ஆய்வகம், நூலகம், கணினி மையம் ஆகியவற்றின் 60% கட்டணத்தை ரத்து செய்யுமாறு கோரப்பட்டு உள்ளது.

முதல், இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் நடத்தலாம் – உச்சநீதிமன்றம் அனுமதி!!

இதனை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி மனுதாரர் கோரிக்கை வைத்திருந்த நிலையில், அதனை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஏற்றுள்ளார். இதற்கான விசாரணை நாளை நடைபெற உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here