Sunday, May 12, 2024

அடுத்த 48 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் கனமழை – வானிலை மையம் அறிக்கை!!!

Must Read

தமிழகத்தில் அடுத்த 48 நேர நேரத்தில் சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கனமழை:

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பரவலாக எல்லா மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இதற்கு வெப்பச்சலனம் மற்றும் கீழடுக்கு சுழற்சி தான் காரணம் என்று வானிலை மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தனர்.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

அதே போல் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.

எங்கு எங்கு மழை:

தமிழகத்தில் உள்ள கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி, ஈரோடு, கரூர், மதுரை, திருச்சி போன்ற மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்பநிலை அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்றும் குறைந்தபட்சமாக 26 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

கொரோனாவிற்கு பின் 500 ரயில்கள் நிறுத்தம், 10,000 நிறுத்தங்களில் ரயில்கள் நிற்காது!!

கடந்த 24 மணி நேரத்தில், ஏத்தாப்பூர் என்ற பகுதியில் அதிகபட்சமாக 9 செ.மீ மழை பதிவாகியுள்ளது. ஆத்தூர், சேலூர் மற்றும் சிவலோகம் பகுதிகளில் குறைந்தபட்சமாக 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

எச்சரிக்கை:

வானிலை ஆய்வு மையம் அளித்துள்ள அறிக்கையில் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு அரபிக்கடலில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதால், மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இன்று முதல் வரும் 6 ஆம் தேதி வரை கடலில் சூறாவளிக்காற்று 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

மதுரையில் வெளுத்து வாங்கும் கனமழை., வைகை ஆற்றில் வெள்ள அபாயம்? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

சமீபகாலமாக கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில், குமரி கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் மழை...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -