கொரோனா முடிவுக்கு பின் 500 ரயில்கள் நிறுத்தம், 10,000 நிறுத்தங்களில் ரயில்கள் நிற்காது – ரயில்வே துறை!!

0
railway
railway

கொரோனா தொற்று முடிவடைந்து ரயில் சேவைகள் தொடங்கும்போது 500 வழக்கமான ரயில்கள் நிறுத்தப்படும் என்றும் இந்திய ரயில்வே நெட்வொர்க்கில் 10,000 நிறுத்தங்களில் ரயில்கள் நிற்காது என இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.

ரயில்வே

கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டுள்ள ரயில் சேவைகள் தொற்று இயல்பு நிலைக்கு திரும்பும்போது இயக்கப்படும். பூஜ்ஜிய கால அட்டவணை மூலமாக ரயில்வே தனது வருவாயை 1500 கோடியாக உயர்த்தவுள்ளது. அதாவது கட்டணங்கள் மற்றும் பிற கட்டணங்களை உயர்த்தாமல் இந்த வருவாயை உயர்த்த திட்டமிட்டுள்ளது.

railways
railways

இந்த புதிய கால அட்டவணையை ஐ.ஐ.டி பம்பாய் கல்வி நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. இதற்கான வேலைகள் கொரோனா தொற்றால் ரயில்கள் நிறுத்தப்பட்டிருந்த நேரத்தில் ஆரம்பமாகியுள்ளன. இந்த கால அட்டவணையின் சில விபரங்கள்.

railways
railways

ஒரு ஆண்டில் 50 சதவீதத்திற்கு குறைவான பயணிகளுடன் இயங்கும் ரயில்கள் இனிமேல் இயக்கப்படாது. இல்லையெனில் அது பிரபல ரயில்களுடன் இணைக்கப்படும். ரயிலின் நீண்ட தூர பயணத்தில் முக்கிய நகரங்கள் மற்றும் இடங்கள் இல்லாதவகையில் சுமார் 200 கி.மீ க்கு எந்த நிறுத்தமும் இருக்காது. எந்த ரயிலும் நிற்காது என்றில்லை உள்ளூர் ரயில் சேவைகள் அந்த நிறுத்தங்களில் தொடரும்.

trains
trains

“ஹப் அண்ட் ஸ்போக் மாடலில்” மாடலில் தான் அனைத்து ரயில்களும் இயங்கும். அதாவது ஹப் என்பது மில்லியன் மக்கள் தொகை உள்ள இடங்களை குறிக்கும். இந்த இடங்களில் நீண்ட தூர ரயில்கள் நிற்கும். மேலும் புறநகர் ரயில் சேவைகளில் எந்த மாற்றமும் இல்லை. இதனால் மும்பை வாசிகள் பயப்பட தேவை இல்லை.

trains
trains

மேலும் இந்த பணிகள் அனைத்தும் இறுதிக்கட்டத்தில் உள்ளன. இந்த திட்டத்தை இந்த ஆண்டு உறுதிக்கும் முடிக்க திட்டமிட்டு வருகின்றன. ஆனால் கொரோனா தொற்றின் தாக்கம் குறைவதை பொறுத்தே அடுத்த ஆண்டு கால அட்டவணை வெளியிடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here