ஆதார் கார்டில் உள்ள முகவரியை ஆன்லைனில் மாற்றுவது எப்படி?? எளிய முறைகள் இதோ!!

0

உங்கள் ஆதார் கார்டில் உள்ள முகவரியை ஆன்லைனில் மாற்ற அல்லது புதுப்பிக்க, பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் கட்டாயமாகும். டிஜிட்டல் முறையில் புதிய முகவரிக்கான ஆதாரத்தை சமர்பிப்பததன் மூலம் இதனை எளிதாக செய்து முடிக்கலாம். இது குறித்த முழுமையான விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஆதார் முகவரி மாற்றம்:

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) பயனர்களுக்கு பலவிதமான ஆன்லைன் வசதிகளை வழங்குகிறது. செல்லுபடியாகும் ஆவணங்களை டிஜிட்டல் முறையில் சமர்ப்பிப்பதன் மூலம் முகவரியை மாற்ற, திருத்த அல்லது புதுப்பிக்க இது அனுமதிக்கிறது. UIDAI மற்ற 44 ஆவணங்களை முகவரிக்கான சான்றாக ஏற்றுக்கொள்கிறது. அந்த 44 ஆவணங்களில் ஒன்று வங்கி பாஸ் புக் ஆகும். எனவே, நீங்கள் ஒரு வங்கி பாஸ் புத்தகத்தை முகவரி ஆதாரமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

UIDAI இது குறித்து வெளியிட்டு உள்ள ட்வீட்டில், ஆதாரில் முகவரி புதுப்பிப்புக்கு வங்கி பாஸ் புத்தகத்தைப் பயன்படுத்துகிறீர்களா? பாஸ் புத்தகத்தில் உங்கள் புகைப்படம் முத்திரையிடப்பட்டு வங்கி அதிகாரியால் கையொப்பமிடப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இது இல்லாமல், இது சரியான ஆவணமாக கருதபப்படாது. என தெரிவித்து உள்ளது.

ஆதார் அட்டையில் முகவரியைப் புதுப்பிப்பதற்கான ஆவணங்கள்:

பாஸ்போர்ட், வங்கி அறிக்கை அல்லது பாஸ்புக், ஓட்டுநர் உரிமம், தொலைபேசி பில், மின்சார பில், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவை 44 ஆவணங்களின் பட்டியலில் உள்ளன, அவை யுஐடிஏஐ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன, அவை சரியான முகவரி ஆதாரத்திற்கு பயன்படுத்தப்படலாம்.

உங்கள் ஆதார் அட்டையில் கொடுக்கப்பட்ட முகவரியை ஆன்லைனில் எவ்வாறு மாற்றுவது??

  • இந்தியாவின் தனித்துவமான அடையாள ஆணையத்தின் வலைத்தளத்திற்கு (uidai.gov.in) செல்லுங்கள்
  • “உங்கள் முகவரியை ஆன்லைனில் புதுப்பிக்கவும்” விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்
  • UIDAI இல் மொபைல் எண்கள் பதிவு செய்த நபர்கள் மட்டுமே அதை செய்ய முடியும்.
  • பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு OTP அனுப்பப்படும்.
  • தொடர OTP எண்ணை உள்ளிடவும்.
  • ‘முகவரி புதுப்பிப்பு’ பிரிவை தேர்ந்தெடுத்து, தேவையான விவரங்களை உள்ளிடவும்.
  • நீங்கள் முழுமையான முகவரியை பூர்த்தி செய்தவுடன், அசல் துணை ஆவணங்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்களை நீங்கள் பதிவேற்ற வேண்டும்.
  • இந்த செயல்முறை முடிந்ததும், யுஐடிஏஐ ஒரு புதிய ஆதார் அட்டையை பயனரால் வழங்கப்பட்ட புதிய முகவரிக்கு அனுப்பும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here