அரியர் தேர்வுகள் ரத்தில் தமிழக அரசின் முடிவு தவறானது – AICTE தலைவர் பேட்டி!!

0

பொறியியல் மாணவர்களுக்கு அரியர் தேர்வுகள் ரத்து தொடர்பான தமிழக அரசின் முடிவு தவறானது என அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழுமத்தின் தலைவர் அனில் சகஸ்ரபுதே தெரிவித்து உள்ளார். மேலும் இது குறித்து உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டு உள்ள வழக்கில் விளக்கம் அளிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

அரியர் தேர்வுகள் ரத்து:

தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்ததை தொடர்ந்து இறுதிப்பருவம் தவிர்த்து பிற செமஸ்டர் தேர்வுகள் மற்றும் அரியர் தேர்வுகளுக்கு விண்ணப்பித்து கட்டணம் செலுத்தி இருந்த மாணவர்கள் உட்பட அனைவர்க்கும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி வழங்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவித்தார். அரியர் தேர்வுகள் ரத்து முடிவு கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

Anna univ
Anna univ

இந்நிலையில் இன்ஜினியரிங் மாணவர்களுக்கு அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து AICTE சார்பில் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டது. அதில் அரியர் மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி வழங்கப்பட்டால் அவர்களை எந்த தொழில் நிறுவனமும், உயர்கல்வி நிறுவனங்களும் ஏற்காது. மேலும் அரியர் மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டால் பல்கலைக்கழக அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டு இருந்தது.

தனியார்மயமாக்குதலை எதிர்த்து நெட்டிசன்ஸ் போர்க்கொடி – ட்விட்டரில் ட்ரெண்டான ஹேஷ்டேக்!!

இன்று AICTE தலைவர் அனில் சகஸ்ரபுதே, அரியர் தேர்வுகள் ரத்து தொடர்பாக தமிழக அரசின் முடிவு தவறானது என தெரிவித்து உள்ளார். மேலும் இது குறித்து உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் AICTE சார்பில் விளக்கம் அளிக்கப்படும் என தெரிவித்து உள்ளார். இதனால் இன்ஜினியரிங் அரியர் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here