Tuesday, May 7, 2024

தனியார்மயமாக்குதலை எதிர்த்து நெட்டிசன்ஸ் போர்க்கொடி – ட்விட்டரில் ட்ரெண்டான ஹேஷ்டேக்!!

Must Read

பொருளாதார மந்த நிலையை சரி செய்ய மத்திய அரசால் பின்பற்றப்பட்டு வரும் தனியார்மயமாக்குதல் கொள்கையை எதிர்த்து ட்விட்டரில் #StopPrivatisation_SaveGovtJob என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

தனியார் மயமாக்குதல்:

கொரோனா நோய் பரவல் காரணமாக இந்தியாவில் உள்ள பல பொதுத்துறை நிறுவனங்களில் மந்தநிலை ஏற்பட்டுள்ளது. பொருளாதாரம் எப்போதும் இல்லாத அளவிற்கும் சரிந்துள்ளது. அதேபோல் இந்தியாவின் ஜிடிபி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி 40 வருடங்களில் இல்லாத அளவிற்கு மைனஸ் 24 சதவீதமாக சரிந்தது. இதற்கு தீர்வு காணும் வகையில் மத்திய அரசு தனியார் மயமாக்குதல் கொள்கையை பின்பற்ற முடிவு செய்துள்ளது.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

அதாவது இந்தியாவில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு கொடுப்பதே ஆகும். நிலைமை சரி செய்யப்படும் என்று எண்ணி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கூடுதலாக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 8.53 சதவீதம் பேர் வேலை இழந்துள்ளனர். இதனை தவிர்க்கும் பொருட்டு ஏர் இந்தியா, அரசு பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ரயில்வே, பெல் உள்ளிட்ட முக்கியமான துறைகளை தனியார்மயமாக்க வேண்டும் என்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ட்விட்டரில் ட்ரெண்டிங்:

இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் தற்போது அனைவரும் அதிகமாக பயன்படுத்தும் சமூகவலைத்தளமான ட்விட்டரில் #StopPrivatisation_SaveGovtJob என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட ஆகி உள்ளது.

hashtag trending
hashtag trending

இதற்கு பலரும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். கூடுதலாக செப்டம்பர் 9 ஆம் தேதியான இன்று 9 மணிக்கு 9 நிமிடங்கள் இந்தியாவிற்காக பிராத்தனை செய்வோம் என்றும் கூறி வருகின்றனர்.

இன்னும் 8 மாதங்களில் தமிழகத்தில் திமுக ஆட்சி தான் நடக்கும்!!

ஒரு சிலர் இந்த தனியார்மயமாக்குதல் மூலமாக பலருக்கு வேலை கிடைக்கும் என்று நம்புகின்றனர். அதே போல் நஷ்டத்தை தவிர்த்து லாபத்தை ஈட்ட இது உதவும் என்றும் தெரிவித்து வருகின்றனர். அப்படி தனியார்மயமாக்குதல் மூலமாக கிடைக்கும் தொகையினை வைத்து இந்தியாவின் வளர்ச்சிக்காக பயன்படுத்தலாம் என்றும் தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

LPG சிலிண்டர் பயனாளிகளே., மானியம் வராததற்கு இதான் காரணம்? அறிவிப்பை வெளியிட்ட ராஜஸ்தான் அரசு!!!

பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் மூலம் இலவச சிலிண்டர் இணைப்புகள் மட்டுமல்லாமல் மானியங்களையும் மத்திய மாநில அரசுகள் வழங்கி வருகிறது. அந்த வகையில் ராஜஸ்தானில் உஜ்வாலா...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -