கிசான் நிதி திட்ட முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் – தமிழக முதல்வர்!!

0

தமிழகத்தில் வேளாண் திட்டத்தில் விவசாயிகளுக்கு கிசான் கிரெடிட் கார்டு வழங்கப்பட்ட நிலையில் கிசான் நிதியில் 110 கோடி வரை முறைகேடு நடந்துள்ளதாகவும், 80 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும் தமிழக வேளாண் செயலாளர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று கூறியுள்ளார்.

கிசான் நிதி திட்டம்:

கிசான் நிதி தமிழகத்தில்  ஏழை எளிய விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட திட்டமாகும். விவசாயிகளின் கடன் தேவைக்கும், அவர்களின் வேளாண் தேவையை பூர்த்தி செய்வதற்காகவும் கிசான் கிரெடிட் கார்டு திட்டம் கொண்டு வரப்பட்டது. பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் படி ஆண்டுக்கு 6000 ரூபாய் ஆக 3 தவணைகளாக வழங்கி வருகிறது. இதனை விவசாயிகளே அருகில் உள்ள வங்கிகளில் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம்.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

kisan-credit-card
kisan-credit-card

ஆனால் தமிழகத்தில் கிசான் திட்டத்தில் இது வரை 110 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்துள்ளதாகவும், இதற்கு காரணமான 80 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும் தமிழக வேளாண் செயலாளர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தில் பத்தாயிரத்திற்கு அதிகமானவர்கள் வங்கிக்கணக்கு சேலம் மாவட்டத்தில் முடக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் முறைகேடு செய்தவர்கள் வங்கி கணக்கில் இருந்து நிதி திரும்ப பெறப்பட்டுள்ளது.

ககன்தீப் சிங் பேடி
ககன்தீப் சிங் பேடி

இதற்கு காரணமானவர்கள் விரைவில் பிடிபடுவர் என்றும் இதிலிருந்து யாராலும் தப்பிக்க முடியாது என்றும் ககன்தீப் சிங் பேடி கூறியுள்ளார். இதனை தொடர்ந்து தமிழக முதல்வரான எடப்பாடி பழனிசாமி, கிசான் திட்ட முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here