Sunday, May 5, 2024

நேரடி நியமன அரசுப் பணிகளுக்கு வயது வரம்பு அதிகரிப்பு – பணியாளர் நிர்வாகம் அறிவிப்பு!!

Must Read

தமிழகத்தில் உள்ள அரசுப் பணிகளுக்கு உச்ச வயது வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சில வகுப்பினரை சேர்ந்தவர்களுக்கு இந்த வயது வரம்பு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் இந்த அரசாணையை வெளியிட்டுள்ளார்.

தமிழக அரசு வேலைவாய்ப்பு:

பல இளைஞர்களின் கனவு அரசு வேலை. அனைத்து தரப்பு பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகள் அரசு துறையில் பணிபுரிவதை பெருமையாக கருதுவர். அரசுப் பணிகளுக்கு வயது வரம்பு உள்ளது. சில வகுப்பினரை சேர்ந்தவர்களுக்கு வயது தளர்வுகளும் கொடுக்கப்பட்டு வந்தது. இப்படியான நிலையில் தமிழகத்தில் நேரடி நியமனம் மூலமாக நிரப்பபடும் பணியிடங்களுக்கு உச்ச வயது வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

இந்த புதிய அறிவிப்பு, பிற்படுத்தப்பட்டோர் (BC), மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC), சீர் மரபினர் (SC/ST) ஆகியோருக்கு பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது. வயது வரம்பு 32 வயதாக அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னதாக வயது வரம்பு 30 ஆக இருந்தது. இந்த நேரடி நியமனங்கள் செய்யப்படும் பணிகளுக்கு கல்வித் தகுதியும் பத்தாம் வகுப்பு ஆகும். இந்த வயது வரம்பு அறிக்கையினை பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை அரசாணையாக வெளியிட்டுள்ளது.

அரசாணை வெளியீடு:

இந்த அரசாணையை தமிழகத்தின் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ளார். அவருக்கு தமிழ்நாடு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல கூட்டமைப்பு தலைவர் சேம.நாராயணன் தனது நன்றிகளை தெரிவித்துள்ளார். இந்த அரசாணையால் பிற்படுத்தப்பட்டோருக்கு இன்னும் நிறைய வாய்ப்புகள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -