EMI செலுத்துவதற்கான கால அவகாசத்தை 6 மாதத்திற்கு மேல் நீட்டிக்க முடியாது – ரிசர்வ் வங்கி அறிக்கை!!

1

கொரோனா பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் பொருளாதாரம் அதல பாதாளத்திற்கு சென்றது. இதனால் பல நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கியதால் ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கின. இதன் விளைவாக லட்சக்கணக்கானோர் ஊரடங்கு காலத்தில் வேலை இழந்து, முறையான வருமானம் இன்றி அவதிப்பட்டனர். இதனால் வங்கிகளில் பெற்ற கடன் தொகைகளுக்கு மாதத்தவணை (EMI) செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

RBI
RBI

இதனால் மத்திய நிதி அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரில், வங்கிகளில் பெற்றுள்ள கடன்களுக்கு EMI தொகை செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. மேலும் ஒத்திவைக்கப்பட்ட EMI தொகைக்கு வட்டிக்கு வட்டி வசூலிக்கும் வங்கிகளின் நடைமுறை இருக்காது எனவும் மத்திய அரசு உறுதி அளித்தது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பிராமணப் பத்திரமும் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதில் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளதாவது,

நேரடி நியமன அரசுப் பணிகளுக்கு வயது வரம்பு அதிகரிப்பு – பணியாளர் நிர்வாகம் அறிவிப்பு!!

வங்கி கடன் தொகைகளுக்கான EMI செலுத்தும் கால அவகாசத்தை 6 மாதத்திற்கு மேல் நீட்டிக்க இயலாது. கடனை திருப்பிச் செலுத்தும் ஒழுங்குமுறை பாதிப்பு, வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் சுமை மற்றும் EMI செலுத்தும் கால அவகாசத்திற்கு பின்பு அதனை செலுத்தும் கடமை பாதிப்பு போன்றவற்றை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

அதுமட்டுமின்றி ரூ.2 கோடிக்கு கீழ் உள்ள கடன் தொகைகளுக்கு மட்டுமே EMI தொகை ஒத்திவைப்பு காலம் முடிந்த பிறகு வட்டிக்கு வட்டி வசூலிக்கப்படாது என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

1 COMMENT

  1. நாங்கள் எங்கள் பணத்தை வங்கியில் டெபாசிட் செய்ய மாட்டோம், எங்கள் பணம் வங்கி இல்லாமல் வேலை செய்யாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here