Sunday, May 12, 2024

ஆயுத பூஜைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுமா?? அதிகாரிகள் விளக்கம்!!

Must Read

இந்த மாதம் இந்துக்களின் பண்டிகையான ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை வருவதால் சிறப்பு பேருந்துகள் நகரங்களுக்கு செல்ல இயக்கப்படுமா?? என்று பயணியர் எதிர்பார்க்கின்றனர். பயணியரின் ஆர்வத்தை பொறுத்து தான் பேருந்துகள் இயக்கபடும் என்று பேருந்து சங்கங்கள் தெரிவிக்கின்றனர்.

கொரோனா பொதுமுடக்கம்:

கொரோனா பரவல் அச்சம் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பேருந்துகள் இயக்கப்படாமல் இருந்து வந்தன. மக்களின் தேவையினை கருதி பேருந்துகள் கடந்த மாதத்தில் இருந்து இயக்கப்பட்டன. அதேபோல் கடந்த அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி முதல் விரைவு போக்குவரத்து கழகங்களின் சார்பில் 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இப்படி இருக்க வரும் அக்டோபர் 25, 26 தேதிகளில் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை கொண்டாடப்படஉள்ளது. அதற்கு முன்னதாக 24 ஆம் தேதி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் தொடர்ச்சியாக விடுமுறை தினங்களாக உள்ளது.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

அதனால் மக்கள் பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர். தமிழகத்தில் ரயில்கள், ஆம்னி பேருந்துகள் சரியாக ஓடாத காரணத்தால் மக்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். இது குறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தாவது “கடந்த அக்டோபர் மாதம் 600 பேருந்துகள் இயக்கப்பட்டன. நாங்கள் எதிர்பார்த்த அளவு பயணியர் இல்லை.”

அடுத்த வாரம் அறிவிப்பு:

“அதனால் பண்டிகை காலங்களில் வரும் முன்பதிவினை பொறுத்து பேருந்துகள் இயக்கப்படுமா? என்று முடிவு எடுக்கப்படும். மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்புகின்றனர்.”

நேரடி நியமன அரசுப் பணிகளுக்கு வயது வரம்பு அதிகரிப்பு – பணியாளர் நிர்வாகம் அறிவிப்பு!!

“ஆனால், பேருந்துகள் மறுமார்க்கமாக வரும்போது போதிய அளவு பயணியர் இல்லாமல் வருகிறது. அதனால் ஆயுத பூஜைகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுமா என்று அடுத்த வாரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

1 COMMENT

  1. தம்மம்பட்டி இருந்து ஆத்தூர் கடம்பூர் வழியாக ஒரு நாளைக்கு இரண்டு முறைதான் பஸ் வருகிறது.
    இதே போலத்தான் மெயின் ரோடில் இருந்து விலகி இருக்கும் ஊர்களின் நிலை.
    முதலில் ஒழுங்கா இருக்கிற வழித்தடங்களில் பஸ் விட சொல்லுங்க அதன் பிறகு சிறப்பு பேருந்துகள் இயக்கலாம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

மதுரையில் வெளுத்து வாங்கும் கனமழை., வைகை ஆற்றில் வெள்ள அபாயம்? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

சமீபகாலமாக கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில், குமரி கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் மழை...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -