தமிழக சட்டமன்ற தேர்தல் – அதிமுக வேட்பாளரை மாற்றக்கோரி 3வது நாளாக தொடர் போராட்டம்!!

0

அதிமுக சார்பில் கள்ளக்குறிச்சி தொகுதியில் அறிவித்த வேட்பாளரை மாற்ற கூறி அதிமுக தொண்டர்கள் தொடர்ந்து மூன்றாவது நாளாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சட்டமன்ற தேர்தல்

தமிழகத்தில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக சில தினங்களுக்கு முன்பு அதிமுக கட்சி தனது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. இதனால் பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி தொகுதியில் வேட்பாளராக மாவட்ட சாரா ஓட்டுனர்களின் அணி செயலாளர் மற்றும் வேளாண் உற்பத்தி கூட்டுறவு சங்க இயக்குனருமான செந்தில்குமாரை அதிமுக தலைமை அறிவித்தது. இதனால் அந்த பகுதியில் பல்வேறு கலவரங்கள் ஏற்பட்டு வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இவரை வேட்பாளராக ஏற்றுக்கொள்ள முடியாது என்று அழகுவேல் பாபு ஆதரவாளர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் போராட்டத்தின் போது அதிமுக தொண்டர் ஒருவர் தீக்குளிக்க முயன்றுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து மூன்றாவது நாளாக அங்கு சாலை மறியல் போராட்டம் நடைபேற்று வருகிறது. இதனால் சென்னை, திருவண்ணாமலை, சேலம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் வாகனங்களிடையே போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வருமான வரி கணக்கினை காட்ட வேண்டும் – தேர்தல் ஆணையம் அதிரடி!!

தற்போது அதிமுக தொண்டர்கள் வேட்பாளரை மாற்றாவிடில் கள்ளக்குறிச்சி நகர நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்துகொள்வோம் என்று கோஷமிட்டு வருகின்றனர். மேலும் சம்பவ இடத்திற்கு போலீசார் குவிந்து அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானம் செய்ய முயற்சித்தனர். ஆனால் அது பலனளிக்கவில்லை. தற்போது தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்துள்ளதால் போராட்டத்தில் கலந்துள்ள 100 பெண்கள் உட்பட 1000 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here