தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வருமான வரி கணக்கினை காட்ட வேண்டும் – தேர்தல் ஆணையம் அதிரடி!!

0

சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது 5 வருட வருமான வரி கணக்கை கட்டாயமாக தாக்கல் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சட்டமன்ற தேர்தல்:

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக நேற்று முதல் வேட்பு மனு தாக்கல் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வேட்பாளர்களும் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்து வருகின்றனர். இந்நிலையில் வேட்பு மனு தாக்களின் பொழுது விண்ணப்பத்தில் கேட்கப்படும் கேள்விகளை பார்த்து வேட்பாளர்கள் திகைத்துப்போய் உள்ளனர். தற்போது அது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதன்படி அந்த மனுவில் வேட்பாளரின் மொபைல் நம்பர், இ மெயில், சமூக வலைதள கணக்கு விவரம் மற்றும் கடந்த 5 ஆண்டுகளில் காட்டப்பட்ட கணக்குப்படி முழு வருமான கணக்கையும் சமர்ப்பிக்குமாறு கேட்கப்பட்டுள்ளது. மேலும் அசையும்/அசைய சொத்து பட்டியலில், இந்த முறை கார், நகை, பைக், நிலம், வீடு ஆகியவற்றுடன் கப்பல், படகு, விமானம் ஆகியவையும் இடம் பெற்றுள்ளது. அதனை வாங்ப்பட்ட ஆண்டு மற்றும் அதனின் விலையும் கேட்கப்பட்டுள்ளது.

‘எச் 1 பி விசாவில் குறைந்தபட்ச ஊதிய நிர்ணயத்திற்கு தடை – ஜோ பைடன் அதிரடி!!

அதுமட்டுமல்லாமல் தேர்தலில் குற்றவாளிகள் மற்றும் தேர்தல் செலவின கணக்குகளை தாக்கல் செய்தவர்கள் போட்டியிட முடியாது என்று கூறி 30 பக்க பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. மேலும் இதுகுறித்து கூறிய தேர்தல் ஆணையம் 80 வயதிற்கு மேற்பட்டவர்கள், கொரோனா பாதித்தவர்கள் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு தபால் ஓட்டு வழங்கப்படுகிறது. அவர்கள் வீடிற்கு சென்று 12 பக்க படிவத்தில் அவர்கள் இசைவு கடிதம் தந்தாள் மட்டுமே தபால் ஓட்டு அளிக்க முடியும். மேலும் தபால் ஓட்டு அளித்தவர்கள் வாக்கு சாவடிக்கு வர கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here