கண்ணம்மாவை வீட்டுக்கு அழைத்து வர சொல்லும் வேணு, முரண்டு பிடிக்கும் பாரதி – இன்றைய எபிசோட்!!

0

மருத்துவமனையிலிருக்கும் சௌந்தர்யா குணமாக வேண்டுமானால் கண்ணம்மா வீட்டுக்கு வர வேண்டும் என வேணு கூற, பாரதி மறுக்கிறார். வீட்டில் கண்ணம்மா சௌந்தர்யாவை நினைத்து அழுது கொண்டிருக்கிறாள்.

பாரதி கண்ணம்மா

மனநல மருத்துவர் மஞ்சுளா சிகிச்சையில் இருக்கும் சௌந்தர்யாவிடம் பேசுகிறார். உங்க மனசுல என்ன இருக்கோ அத பத்தி தைரியமா சொல்லுங்க என மஞ்சுளா கூற சௌந்தர்யா, கண்ணம்மா மற்றும் பாரதி குறித்து பேச ஆரம்பிக்கிறார். என் மகன் பாரதி கண்ணம்மாவை கல்யாணம் செய்தான்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆரம்பத்தில் கண்ணம்மாவை எனக்கு பிடிக்கவில்லை, அப்புறம் தான் தெரிஞ்சது அவள் மத்தவங்க சந்தோஷத்துக்காக எதுனாலும் செய்வான்னு. பாரதியோட ஏற்பட்ட பிரச்சனையினால அவ ஒருநாள் வீட்ட விட்டு போய்ட்டா. அவளை தேடி எட்டு வருசமா அலைஞ்சேன்.

இப்போதான் அவ சென்னையில இருப்பத கண்டுபிடிச்சேன். வீட்டுக்கு வர சொல்லி அவளை கூப்பிடப்போ வரமாட்டேன்னு சொல்லிட்டா. தன்மானத்தோட இத்தனை வருசமா வாழ்ந்துட்டு இருக்கா. எனக்கு வேற எந்த ஆசையும் இல்லை. கண்ணம்மா வீட்டுக்கு வரணும். அவ என் கூட இருக்கனும்.

முல்லையின் மீது காதலை பொழியும் கதிர் – “வீக்எண்டு” ஸ்பெஷல் எபிசோடாக “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல்!!

அவ என்ன அத்தைன்னு கூப்பிடனும் என்று கூறுகிறார். இவையெல்லாவற்றையும் பாரதி கேட்டுக்கொண்டிருக்கிறார். அகிலை சௌந்தர்யாவிடம் அனுப்பி விட்ட பின்பு, பாரதியிடம் வேணு பேசுகிறார். சௌந்தர்யாவை பிரச்சனையிலிருந்து காப்பாற்றணும் என்றால் கண்ணம்மா வீட்டுக்கு வரணும் என்று வேணு சொல்கிறார்.

அதற்கு மறுத்துவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார் பாரதி. கண்ணம்மாவுக்கு போன் செய்யும் ஹேமா, சௌந்தர்யாவுக்கு நடந்ததை அழுதுகொண்டே கூறுகிறாள். நடந்ததை கேள்விப்பட்டு அதிர்ச்சியாகிறார் கண்ணம்மா. மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு வரும் சௌந்தர்யா கண்ணம்மாவை நினைத்து அழுது கொண்டிருக்கிறார்.

எனக்கு கண்ணம்மா கூட ஒரு பத்து நாள் இருக்கனும்னு தோணுது என சௌந்தர்யா கூற கண்ணம்மா ஒத்துக்கொள்ளமாட்டாள் என வேணு கூறுகிறார். வீட்டில் அழுது கொண்டிருக்கும் கண்ணம்மா, அத்தைக்கு உடம்பு சரியில்லை என துளசியிடம் கூறுகிறார். ஹேமாவுக்கு போன் செய்து பேச சொல்லிவிட்டு கிளம்புகிறார் துளசி. இத்துடன் இன்றைய ‘பாரதி கண்ணம்மா’ தொடர் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here