முல்லையின் மீது காதலை பொழியும் கதிர் – “வீக்எண்டு” ஸ்பெஷல் எபிசோடாக “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல்!!

0

முல்லை வீட்டில் வேலை செய்வதை பார்க்கும் கதிர் அவருக்கு உதவி செய்கிறார். ஜனார்த்தனன் புதிதாக கட்டிய சூப்பர் மார்க்கெட்டில் மாட்டிக்கொண்டு தவிக்கும் ஜீவா ஜனார்த்தனனின் சூழ்ச்சியை அறிந்து கொள்வாரா என ஒளிபரப்பாகவுள்ளது இன்றைய தொடர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

இன்றைய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் முல்லையிடம் தனத்தை கவனிக்க சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார் மூர்த்தி. மூர்த்தி போனதும் மீனாதான் மாமா இப்படி செஞ்சாங்க, நான் சொன்னதை அவங்க கேட்கவே இல்லை மாமா என கதிரிடம் கூறுகிறார் முல்லை. எப்போவுமே இந்த இடம் வழுக்காது என கூறிவிட்டு நடக்கும் முல்லை வழுக்கி கீழே விழ தாங்கிப்பிடிக்கிறார் கதிர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பின்பு முல்லை கீழே விழுந்து விடக்கூடாது என்பதற்காக அந்த இடத்தை கிளீன் செய்கிறார் கதிர். சமைத்து கொண்டிருக்கும் முல்லையிடம் வரும் கதிர், சாப்பாடு செய்து கண்ணனிடம் கொடுத்து விடும்படி கூறுகிறார். லெமன் ஜூஸ் போட்டு தரவா என கேட்கும் முல்லையிடம் வேண்டாம் என மறுத்து விடும் கதிர் அங்கிருந்து கிளம்ப மனதில்லாமல் முல்லையையே சுத்தி சுத்தி வருகிறார்.

வேலை செய்யும் போது முல்லை கன்னத்தில் விழும் முடியை அழகாக கோதி விடுகிறார் கதிர். என்னாச்சு உனக்கு அங்க வழுக்கி விழுற, இங்க காரத்தை கண்ணுல தேய்க்குற என கதிர் கூற உங்களை பார்த்தாலே பதட்டமாயிடுது என முல்லை கூறுகிறார். முல்லையின் கையை பிடித்து வெங்காயம் வெட்டி ரொமான்ஸ் செய்து கொண்டிருக்கும் கதிரை மூர்த்தி கடைக்கு போக சொல்லி அனுப்பி விடுகிறார்.

ரேஷன் பொருட்கள் வீடுதோறும் விநியோகிக்கும் திட்டம் – டெல்லியில் துவக்கம்!!

கடைக்கு வரும் கதிர், குமரேசன் மாமாவிடம் வீட்டில் தனத்துக்கு நடந்தவற்றை கூறுகிறார். விஷயத்தை கேட்டதும் அதிர்ச்சியடையும் குமரேசன் பின்பு கதிரிடம் முல்லையை பற்றி விசாரிக்கிறார். ஜனார்த்தனனின் சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து கொண்டிருக்கும் ஜீவா ஜனார்த்தனனின் செயலால் வருத்தப்படுகிறார்.

காலேஜ் முடிந்ததும் ஐஸ்வர்யாவை வீட்டில் விடுவதற்காக வருகிறார் கண்ணன். காலேஜ் பீஸ் கட்டவில்லை, நான் ஜெகா சித்தப்பா வீட்டில் இருப்பது அவங்களுக்கு பிடிக்கவில்லை என கண்ணனிடம் கூறி வருத்தப்படுகிறார் ஐஸ்வர்யா. இத்துடன் இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here