உடல் எடை குறைந்த நடிகை நயன்தாரா – போட்டோவை பார்த்து ரசிகர்கள் ஷாக்!!

0
nayan

மெலிந்த உடல் எடையுடன் நடிகை நயன்தாரா எடுத்துள்ள புகைப்படம் ஒன்றை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இணையத்தில் வெளியான அவரது புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

நயன்தாரா

தமிழ் திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா. தமிழ் சினிமாவில் ஏறக்குறைய 20 வருடங்களுக்கும் மேலாக முன்னணி நடிகையாக இருந்து வருகிறார் நயன்தாரா. இந்த 20 வருடங்களில் எத்தனையோ கதாநாயகிகள் வந்த போதிலும், திறமையான நடிகைகள் இருந்த போதிலும் நயன்தாராவுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் பெரிய அன்பு உண்டு.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

எத்தனையோ சர்ச்சைகள், கிசுகிசுக்கள் நயன்தாரா மீது எழுந்தாலும் அவரது புகழ் இன்றும் தமிழ் சினிமாவில் உச்சத்தில் தான் காணப்படுகிறது. சினிமாவில் மிக இயல்பாக, அழகாக நடிக்கக்கூடிய நாயகிகளில் நயன்தாராவும் ஒருவர். மலையாள நடிகையான நயன்தாரா தெலுங்கு, மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல மொழிப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் நடித்த அத்தனை மொழியிலும் இவருக்கு நிகர் இவரே என்று சொல்லக்கூடிய அளவுக்கு உணர்வுப்பூர்வமாக நடித்திருப்பார். முன்னதாக நடன இயக்குனர் பிரபுதேவாவுடன் காதல்வயப்பட்ட நயன்தாரா இந்து மதத்துக்கு மாறினார். முன்னதாக நடிகர் சிம்புவுக்கும் நயன்தாராவுக்கும் இடையே காதல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வருமான வரி கணக்கினை காட்ட வேண்டும் – தேர்தல் ஆணையம் அதிரடி!!

இந்த இரு காதல் அனுபவங்களும் தோல்வியில் முடிந்த நிலையில் சினிமாவில் கவனம் செலுத்தி வந்தார் நயன்தாரா. பின்பு ஆறு வருடங்களுக்கு முன்னாக ‘நானும் ரவுடி தான்’ என்ற திரைப்படத்தில் நடித்து வந்த நயன்தாராவுக்கு அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதல் ஏற்பட்டது.

தற்போது இன்று வரை நீடிக்கும் இவர்களது காதல் விரைவில் திருமணத்தில் முடியும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. முன்னதாக சினிமாவில் ஆரம்ப கால கட்டங்களில் குண்டான உடல்வாகு கொண்ட நடிகை நயன்தாரா சமீபகாலமாக மெலிந்த தோற்றத்துடன் காணப்படுகிறார். தற்போது மெலிந்த தோற்றத்தில் நடிகை நயன்தாரா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here