‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு உடைந்த கையுடன் குத்தாட்டம் போட்ட ஜெனிலியா – வைரலாகும் வீடியோ!!

0

தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தின் வாத்தி கம்மிங் பாடலுக்கு தற்போது நடிகை ஜெனிலியா தனது கை உடைந்த நிலையில் கூட குத்தாட்டம் போட்டுள்ளார். தற்போது அதற்கான வீடியோ வைரலாகி வருகிறது.

வாத்தி கம்மிங்:

கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான படம் தான் மாஸ்டர். இந்த படம் எதிர்பார்த்ததை விட அதிக வரவேற்பை பெற்றது. மேலும் கொரோனா காலத்தில் அனைவரையும் மீண்டும் திரையரங்கிற்கு வரவைத்த திரைப்படம் தான் மாஸ்டர். அந்த அளவிக்ரு இந்த திரைப்படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மேலும் இந்த படத்தில் இடம் பெற்ற பாடல் அனைத்தும் செம ஹிட் ஆகியுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

Exclusive! Genelia D'Souza: "My COVID-19's 21 days all alone in a separate  flat were very tough" | Hindi Movie News - Times of India

குறிப்பாக இதில் இடம் பெற்றிருந்த வாத்தி கம்மிங் பாடலுக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை குத்தாட்டம் போட்டு வருகின்றனர். அந்த அளவிற்கு இந்த பாடல் அனைவரிடமும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த வகையில் இந்த படத்திற்கு நடிகை ஜெனிலியா குத்தாட்டம் போட்டுள்ளார். ஏற்கனவே இவர் விஜய்யுடன் சச்சின் மற்றும் வேலாயுதம் படத்தில் ஜோடியாக நடித்துள்ளார். மேலும் சில தினங்களுக்கு முன்பு ஜெனிலியாவிற்கு ஸ்கேட்டிங் பயிற்சி செய்யும் பொழுது ஏற்பட்ட விபத்தினால் அவரது கை உடைந்தது.

முல்லையின் மீது காதலை பொழியும் கதிர் – “வீக்எண்டு” ஸ்பெஷல் எபிசோடாக “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல்!!

எனவே அவர் தற்போது தனது கையில் கட்டு போட்டுள்ளார். தற்போது தனது உடைந்த கையை வைத்துக்கொண்டு ஜெனிலியா தனது கணவர் ரிதேஷ் தேஷ்முக் உடன் குத்தாட்டம் போட்டுள்ளார். தற்போது அதற்கான வீடியோ பதிவை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஜெனிலியா. இதனை ரசிகர்கள் அனைவரும் பார்த்து ரசித்து வருகின்றனர். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

முழு விடியோவை பார்க்க கிளிக் பண்ணுங்க

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here