பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், கல்விக்கடன் ரத்து – திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு!!

0

தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலுக்காக தற்போது திமுக கட்சி தலைவர் தனது கட்சியின் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார். இதில் மக்களுக்கு பயன்பெறும் வகையில் பல திட்டங்கள் இடம்பெற்றுள்ளது.

சட்டமன்ற தேர்தல்:

தமிழகத்தில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக நேற்று முதல் வேட்பு மனு தாக்கல் துவங்கபட்டது. இந்நிலையில் அனைத்து வேட்பாளர்களும் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்து வருகின்றனர். தமிழகத்தில் தற்போது அரசியல் களமே சூடுபிடிக்க துவங்கியுள்ளது. இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் தனது தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார். இதனை ஸ்டாலின் வெளியிட துறைமுருகன் மற்றும் டி.ஆர்.பாலு பெற்றுக்கொண்டார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தேர்தல் வாக்குறுதிகள்:

அரசு உள்ளூர் பேருந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லா வசதி வழங்கப்படும். மேலும் மகளிர் சுய உதவிக்குழுவினரின் நிலுவையில் உள்ள வங்கி கடன் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும். அதேபோல் 30 வயதிற்கு மேற்பட்ட கல்லூரி மாணவர்களுக்கு கல்வி கடன் தள்ளுபடி செய்யப்படும். 100 நாட்கள் வேலைத்திட்டத்தை 150 நாட்களாக அதிகரிக்கப்படும். மேலும் பள்ளி மாணவர்களுக்கு வரும் காலங்களில் காலையில் ஊட்டச்சத்து அளிக்கும் வகையில் பால் வழங்கப்படும். சென்னையை தொடர்ந்து திருச்சி, நெல்லை, மதுரை, சேலம், கோவை ஆகிய நகரங்களில் மெட்ரோ துவங்கப்படும்.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வருமான வரி கணக்கினை காட்ட வேண்டும் – தேர்தல் ஆணையம் அதிரடி!!

மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணமில்லா பேருந்து சேவை வழங்கப்படும். பகுதிநேர ஆசிரியர்கள் அனைவருக்கும் பணி நிரந்திரம் செய்யப்படும். மேலும் தமிழகத்தில் ரூ.2,000 கோடி முதலீட்டில் 200 தடுப்பணைகள் கட்டப்படும். மேலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு கைக்கணினி மற்றும் பள்ளிகளில் இலவச வைஃபை பொருத்தப்படும். மேலும் மகப்பேறு உதவித்தொகையாக ரூ.24,000 வழங்கப்படும். அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் 75% வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படும் என இதுபோன்று பல அறிவிப்புகள் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here