அதுக்குள்ள “மாஸ்டர்” திரைப்படம் டிவிலயா?? – ரசிகர்கள் குஷி!!

0

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான “மாஸ்டர்” திரைப்படம் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி டிவியில் ஒளிபரப்படும் என்ற தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து “தளபதி” ரசிகர்கள் மிகவும் குஷியில் உள்ளனர்.

மாஸ்டர் திரைப்படம்

முன்னணி நடிகரான நடிகர் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் “மாஸ்டர்”. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “சன் பிக்ச்சர்ஸ்” நிறுவனம் தயாரிப்பில் இந்த திரைப்படம் வெளியானது. இந்த கடந்த ஏப்ரல் மாதம் இந்த திரைப்படம் வெளியாக இருந்தது. ஆனால், பொது முடக்கம் காரணமாக இந்த திரைப்படம் வெளியவில்லை.

‘சுயமரியாதை உள்ளவர்கள் மட்டும் பாஜகவிற்கு வாங்க’ – சி.டி.ரவி பேட்டி!!

அதே போல் விஜய் திரைப்படம் கண்டிப்பாக திரையரங்குகளில் தான் வெளியாக வேண்டும் என்று ரசிகர்கள் கேட்டுக்கொண்டதால் இந்த திரைப்படம் இந்த ஆண்டு பொங்கல் அன்று வெளியானது. கொரோனா பொது முடக்கத்திற்கு பின்பாக திரையரங்கில் வெளியான முன்னணி நடிகரின் திரைப்படம் இது தான். கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் இந்த படத்தினை ரசிகர்கள் பார்த்தனர்.

ரசிகர்கள் குஷி

இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் மிகவும் வித்தியாசமான ஒரு கதைக்களத்தினை தேர்தெடுத்து நடித்திருந்தார் என்று கூட கூறலாம். அதே போல் இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார். இதன் காரணமாகவே இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகவும் அதிகரித்திருந்தது. இப்படியாக இருக்க, இந்த திரைப்படத்தினை “சன் பிக்ச்சர்ஸ்” நிறுவனம் தயாரித்ததால் சன் தொலைக்காட்சியில் இந்த திரைப்படம் ஒளிபரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனை அடுத்து இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி அதாவது தமிழ் புத்தாண்டினை முன்னிட்டு ஒளிபரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலை 6 மணிக்கு இந்த திரைப்படம் ஒளிபரப்பாகும் என்ற தகவல் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. இதனால் “தளபதி” ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here