நடிகர் சேதுராமனின் முதல் ஆண்டு நினைவு நாள் – மனைவியின் உருக்கமான பதிவு!!

0

டாக்டர் சேதுராமன் தமிழ் சினிமாவின் ஒரு நடிகர், தயாரிப்பாளரும் கூட. கடந்த ஆண்டு இதே நாள் எதிர்பாராத விதமாக மரணத்தை சந்தித்த சேதுராமனின் முதல் ஆண்டு நினைவு நாள் இன்று.

நடிகர் சேதுராமன்

‘கண்ணா லட்டு திண்ண ஆசையா’ என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் டாக்டர் சேதுராமன். தொடர்ந்து வாலிபராஜா, சக்க போடு போடு ராஜா ஆகிய திரைப்படங்களில் நடிகர் சந்தானத்துடன் இணைந்து நடித்துள்ளார் சேது. நடிகர் சந்தானத்தின் நெருங்கிய நண்பராகவும் இருந்து வந்தார் இவர். சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்னமே இவர் பிரபலங்கள் அறிந்த ஒரு மருத்துவர். பல பிரபலங்களின் மருத்துவ ஆலோசகராகவும் நடிகர் சேதுராமன் இருந்து வந்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இவருக்கு உமா என்ற பெண்ணுடன் திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு உடல்நல குறைவு காரணமாக எதிர்பாராதவிதமாக மரணமடைந்தார் சேது. சேதுவின் மரணம் திரையுலகையே உலுக்கி போட்டது. குறைந்த வயதே உடைய சேதுராமனின் மறைவு திரையுலக பிரபலங்களுக்கு பேரிழப்பாக இருந்தது. இதே நாள் சேதுராமன் இறந்து ஒரு வருடம் ஆகியுள்ளது. இன்று சேதுராமனின் நினைவு நாளை ஒட்டி அவரது மனைவி உமா ஒரு உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.

குக் வித் கோமாளியில் ஸ்பெஷல் கெஸ்ட்டாக வரும் பிக்பாஸ் பிரபலம் – தெறிக்கவிடும் ப்ரோமோ!!

அதில் ‘மா.. இப்படி தான் நான் உன்னை கூப்பிடுவேன். உன் பெயரை வைத்து இதுவரை உன்னை அழைத்ததில்லை. அது நான் உன் மீது வைத்திருக்கும் மரியாதை தான். என்னுடைய அன்றாட வேலை எந்நேரமும் உன்னை சுற்றி இருப்பது தான். இந்த நான்கு வருடத்தில் நான் முக்கியத்துவம் கொடுத்தது உன்னை பற்றி மட்டும் தான். பணத்தை விட அன்பும் சந்தோஷமும் தான் உனக்கு முக்கியம். ஒரு வருடம் ஆனதை நம்ப முடியவில்லை. என்றாவது ஒருநாள் நீ கதவை தட்டுவாய் என காத்திருக்கிறேன். நம் குழந்தை சஹானா வளர்ந்து விட்டாள். நீ ரொம்ப தூரத்தில் இல்லை. என் அருகில் தான் இருக்கிறாய் என்பதை உணருகிறேன்’ என பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here