எழிலின் மிரட்டலுக்கு பயந்து பாக்கியாவின் பிஸ்னஸ்க்கு ஓகே சொல்லும் கோபி – கொண்டாட்டத்தில் பாக்கியலட்சுமி குடும்பத்தினர்!!

0

பாக்கியலட்சுமி சீரியலில் எழில் நடந்த அனைத்து உண்மைகளையும் தெரிந்துகொண்டு கோபியிடம் நேரடியாகவே சென்று கேள்வி கேட்கிறார். இதனால் கோபி பதில் பேச முடியாமல் திணறுகிறார்.

பாக்கியலட்சுமி

நேற்றைய எபிசோடில் ராஜேஷிடம் எழில் தன் அம்மாவிடம் கோபி பற்றிய உண்மைகளை சொல்ல வேண்டாம் என்று கெஞ்சுகிறார். இதனால் ராஜேஷ் எதுவும் சொல்லாமல் கிளம்புகிறார். எழில் கோபி ரூமிற்கு வருகிறார். இதனால் கோவமடையும் கோபி எழிலிடம் சண்டை போடுகிறார். அதற்கு எழில் எங்க அம்மா பிஸ்னஸ் பண்ணா குடும்பத்தை பார்த்துக்க முடியாதுனு சொன்னிங்க.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

நீங்க எங்களுக்காக முழு நேரமும் உழைக்கிறதா சொன்னிங்க எப்படி பட்ட ஃபிராடு நீங்க என்று சொல்ல கோபிக்கு கோவம் வந்து அடிக்க செல்கிறார். உங்க அம்மா எனக்கு எந்த அளவுலயும் பொருத்தமே கிடையாது என்று சொல்கிறார் கோபி. இதனால் கடுப்பாகும் எழில் ராஜேஷ் வந்து சொன்ன விஷயத்தை சொல்ல கோபி திணறுகிறார்.

அப்படி என்ன சொன்னாரு என்று கேட்க சொல்லவே வாய் கூசுது என்று சொல்கிறார். கோபி அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை என்று சமாளிக்கிறார். நீங்களும் அவரு பொண்டாட்டியும் சேர்ந்து இருக்க போட்டோவை காட்டினான் என்று சொன்னதும் கோபிக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

கொரோனா மையங்களாக மாறும் கல்லூரி, தொழில் நிறுவனங்கள் – தமிழக அரசு அதிரடி!!

இதெல்லாம் உங்களுக்கு அசிங்கமாக இல்லையாப்பா என்று கேட்கிறார். அதன் பிறகு குன்னக்குடியில் உங்களை ஒரு லேடியுடன் இருப்பதை நான் பார்த்தேன் என்று சொல்கிறார். யாராவது தன் பொண்டாட்டியையே கேவலமாக பேசுவார்களா அவன் எவ்வளவு கேவலமானவன் என்று சொல்ல எழில் நீங்க மட்டும் நல்லவரா என்று பதில் கேள்வி கேட்கிறார்.

ஒருநாளாவது எங்க அம்மாவை நல்லபடியா நடத்தி இருக்கீங்களா?? அவன் எல்லார்கிட்டயும் சொல்லலாம்னு தான் வந்தான். ஆனால் நான் தான் கெஞ்சி வெளிய அனுப்புனேன். உங்களுக்காக இல்லை. அம்மா, பாட்டி, தாத்தாவுக்காக தான் அவன்கிட்ட கெஞ்சினேன் என்று சொல்கிறார்.

அடுத்ததாக தன் அம்மா ஆசைப்பட்ட பிஸ்னஸை கண்டிப்பாக செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் கூறுகிறார். மேலும் மசாலாவை எட்டி உதைத்ததற்கு மன்னிப்பு கேட்க சொல்லி சொல்கிறார். கீழே வந்து கோபி எழில் சொன்ன அனைத்தையும் சொல்கிறார். இதனால் பாக்கியா மிகவும் சந்தோஷமாகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here