Saturday, May 18, 2024

கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படும் – மத்திய அமைச்சர் தகவல்!!

Must Read

நாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷா வரதன் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசிக்கான ஒத்திகை இன்று நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றது.

கொரோனாவிற்கான தடுப்பூசி:

உலகளவில் கொரோனாவிற்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றது. இந்தியாவில் கொரோனாவிற்கான தடுப்பூசி பரிசோதனை தற்போது ஒப்புதலுக்காக காத்து இருக்கின்றது. தடுப்பூசி பெறப்பட்டதும் அதனை எவ்வாறு மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்பது குறித்து மத்திய அரசு தீவிரமாக பணிகளில் ஈடுபட்டு வருகின்றது. பணியின் முதற்கட்டமாக, தடுப்பூசிக்கான ஒத்திகை இன்று நாட்டின் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகின்றது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த ஒத்திகையில் மக்களுக்கு எவ்வாறாக தடுப்பூசியினை கொண்டு சேர்க்க வேண்டும் என்றும், மாநிலங்கள் வாரியாக தடுப்பூசிகளை எவ்வாறாக விநியோகிக்க வேண்டும் என்று ஒத்திகை பார்க்கப்பட்டு வருகின்றது, அதே போல் இந்த ஒத்திகையில் தடுப்பூசி மக்களுக்கு போடப்பட மாட்டாது. முன்னுரிமை வாரியாக யாருக்கு முதலில் போட வேண்டும் என்றும் ஒத்திகையும் செய்யப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் சென்னை, நெல்லை, கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஒத்திகை நடைபெற்று வருகின்றது. முக்கியமாக கொரோனா அதிகம் பரவி வரும் மாவட்டங்களில் ஒத்திகை நடைபெற்று வருகின்றது.

மீண்டும் உயர்ந்த தங்கத்தின் விலை – அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்!!

இது ஒரு பக்கம் இருக்க, இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷா வரதன் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறியதாவது, “கொரோனா தடுப்பூசி ஒத்திகை நாட்டில் வெற்றி பெற்ற பிறகு முன்னதாக கூறியதை போல் தடுப்பூசி அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படும்” இவ்வாறாக தெரிவித்துள்ளார். தற்போது உள்ள சூழலை கருத்தில் கொண்டு மத்திய அரசு அவசர கால ஒப்புதல் வழங்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு., இந்த தேதி வரை விண்ணப்பிக்கலாம்? வெளியான அறிவிப்பு!!!

தமிழக தொடக்க கல்வி மற்றும் பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, ஆண்டுதோறும் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நடப்பு 2024-25 ஆம் கல்வியாண்டில்,...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -