வெகுநாட்களாக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதி முடிவானதை தொடர்ந்து சிம்புவும் தனது நடிப்பில் உருவாகியுள்ள ஈஸ்வரன் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளார். விஜயின் மாஸ்டர் படம் ரிலீஸ் ஆகும் ஜனவரி 13ம் தேதிக்கு மறுநாள் ஜனவரி 14ம் தேதி தனது படம் வெளியாகும் என்று சிம்பு தெரிவித்துள்ளார்.
மாஸ்டருடன் மோதுகிறாரா ஈஸ்வரன்??
பல்வேறு தடைகளுக்கு பின் முதல்வர் பழனிசாமியை கலந்து ஆலோசித்த பிறகு நேற்று மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 13ம் தேதி மாஸ்டர் ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது சிம்புவும் தனது ட்விட்டர் பக்கத்தில் ஈஸ்வரன் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
கடந்த ஆண்டு வெளியான “வந்தா ராஜாவாதான் வருவேன் ” படத்திற்கு பிறகு சிம்புவின் படங்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது அவரது ரசிகர்களுக்கு மிகவும் ஏமாற்றமாக இருந்து வந்தது. அவர்களை மகிழ்விக்கும் விதமாக ஓராண்டுக்கு பிறகு எடையை வெகுவாக குறைத்து ஸ்லிம் லுக்கில் சிம்பு நடித்துள்ள படம் தான் ஈஸ்வரன். மிகவும் இளமையான தோற்றத்தில் வெளியான படத்தின் firstlook வைரல் ஆனது.
கஞ்சா செடி பயிரிட மாநில சட்டத்துறை அனுமதி – வலுக்கும் எதிர்ப்புகள்!!
சமீபத்தில் நிறைவடைந்த அப்படத்தின் ரிலீஸ் தேதியை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த அவரது ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் விதமாக சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில், ஜனவரி 14ம் தேதி ஈஸ்வரன் படம் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதி ஜனவரி 13 என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதோடு மோதும் விதமாக ஈஸ்வரன் படத்தின் ரிலீஸ் தேதி 14 என அறிவிக்கப்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.