சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு – இன்று முதல் பக்தர்கள் அனுமதி!!

0

உலக பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலின் நடை திறக்கப்பட்டுள்ளது. மேலும் கோவிலுக்கு பக்தர்கள் இன்று முதல் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவித்துள்ளனர். இதனால் ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

சபரிமலை:

கடந்த 9 மாதங்களாக கொரோனா தொற்றால் மக்கள் அவதிப்பட்டு வந்தனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக மத்திய அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து வந்தது. மேலும் தற்போது கொரோனாவின் வேகம் குறைந்து வருவதால் சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு பின்பற்றி வருகிறது. மேலும் கோவில்கள், ஆன்மிக தளங்கள், சுற்றுலா தளங்கள் போன்றவற்றிற்கு மக்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் அனைத்து இடத்திலும் அரசு அறிவித்திருந்த பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறக்கப்பட்டுள்ளது. மகர விளக்கு பூஜைக்காக நேற்று மாலை சரண கோஷங்கள் முழங்க சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறக்கப்பட்டது. மேலும் இதனை ஐயப்பன் கோவில் தந்திரி கண்டரரு ரஜீவரு நடையை திறந்து வைத்தார். ஐயப்பன் கோவிலுக்கு இன்று முதல் பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கபடுவார்கள் என்றும் தெரிவித்துள்ளனர். இன்று முதல் அடுத்த 20 நாடுகளுக்கு அதாவது ஜனவரி மாதம் 19ம் தேதி வரை மக்கள் அனுமதிக்கப்படவுள்ளனர்.

பொங்கலுக்கு ரிலீசாகும் சிம்புவின் “ஈஸ்வரன்” – “மாஸ்டர்” உடன் மோதல்!!

கொரோனா தடுப்பு நடவடிக்கை:

மேலும் கேரள நீதிமன்ற உத்தரவின் படி, தினமும் ஐந்தாயிரம் பக்தர்கள் மட்டுமே செல்ல அனுமதியளித்துள்ளனர். கோவிலுக்கு செல்வதற்காக முன்பதிவு செய்ய வேண்டும் என்று அறிவித்திருந்தனர். இதற்கான முன்பதிவு கடந்த செவ்வாய்க்கிழமை மாலை திறக்கப்பட்டது. முன்பதிவு திறந்த 1 மணி நேரத்தில் சுமார் 1 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். மேலும் தரிசனத்துக்கு வரும் அனைவரும் அங்கீகாரம் பெற்ற ஆய்வகத்தில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதற்கான முடிவுகள் நெகட்டிவ் என்று வந்திருந்தால் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்கள்.

வரும் ஜனவரி 14ம் தேதி மகரவிளக்கு பூஜையும், பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனமும் நடைபெறவுள்ளது. மேலும் பக்தர்களுக்காக உணவு, மருத்துவம், குடிநீர் மற்றும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கவனிக்க கேரள அரசும், திருவிதாங்கூர் தேவசம்போர்டும் மேற்கொள்ளவிருக்கிறது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here