கஞ்சா செடி பயிரிட மாநில சட்டத்துறை அனுமதி – வலுக்கும் எதிர்ப்புகள்!!

0
Cannabis cultivation in goa
Cannabis cultivation in goa

கோவா சட்டத்துறை தற்போது மருத்துவ பயன்பாடுகளுக்கு கஞ்சா செடிகளை பயன்படுத்தலாம் என்று அனுமதி அளித்துள்ளது. இதற்கு பல தரப்பினரும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

கஞ்சா செடி:

பல நாடுகளில் கஞ்சா செடி அதன் மருத்துவ குணங்களுக்காக மருத்துகளில் சேர்க்கப்படுகிறது. இதன் காரணமாக அவை வளர்க்கவும் படுகின்றனர். ஆனால், இந்தியாவை பொறுத்தவரை கஞ்சா மிகவும் ஆபத்தான ஒரு பொருளாக தான் பார்க்கப்படுகின்றது. நம் நாட்டை பொறுத்தவரை பலரும் கஞ்சாவை அதன் மருத்துவ குணங்களுக்காக பயன்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், இந்திய அரசு இளைஞர்கள் தற்போது கஞ்சாவை அதிகமாக பயன்படுத்தி உடல் நலனை கெடுத்து கொள்கின்றனர் என்றும் அவர்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டும் கஞ்சா பயிரிட தடை விதித்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது கோவா அரசு கஞ்சா செடிகளை மருத்துவ குணங்களுக்காக பயிரிட அனுமதி அளித்துள்ளது. கஞ்சா சாகுபடியை சட்டபூர்வமாக்கவும், அதனை ஒரு அதிகாரப்பூர்வ தொழிலாக மாற்றவும் திட்டமிட்டு வருவதாக அந்த மாநிலத்தின் முதலமைச்சர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார். கூடுதலாக, சுகாதாரத்துறையின் முன்மொழிவு குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

“வேளாண் சட்டங்களை ஒரு போதும் திரும்ப பெற முடியாது” – மத்திய அரசு திட்டவட்டம்!!

கஞ்சா நம் நாட்டின் பாரம்பரிய செடி என்றும், இதனை மற்ற நாடுகளில் மருந்துகளை பயன்படுத்துகின்றனர் என்று முதல்வர் சுட்டிக்காட்டினார். அதே போல், அமெரிக்கா, கனடா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளில் இதன் சாகுபடியை சட்டப்படியாகவே செய்கின்றனர் என்றும் தெரிவித்தார். பெரும் வியாதிகளில் இருந்து விடுபட கஞ்சா செடியில் உள்ள மருத்துவ குணங்கள் உதவுவதாக தெரிவித்தார். மாநில அரசின் இந்த முடிவு குறித்து எதிர்க்கட்சிகள் மற்றும் பலரும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here