Wednesday, May 8, 2024

கிடுகிடுவென உயரும் ஆபரணத் தங்கத்தின் விலை – பொதுமக்கள் அதிர்ச்சி!!

Must Read

கடந்த ஒரு சில தினங்களாக குறைந்து வந்த தங்க விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளதால் மக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். பண்டிகை தினமான இன்று கூட தங்க விலை ஏற்றம் அடைந்துள்ளது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்ச்சியான ஏற்றம்:

வெளிநாடுகளில் முதலீட்டு பொருளாக பார்க்கப்படும் தங்கம், இந்தியாவில் ஒரு ஆபரண பொருளாக பார்க்கப்படுகிறது. இதனாலேயே தங்கத்திற்கு என்று தனி மதிப்பு உண்டு. தங்க விலை நம் நாட்டை பொறுத்தவரை காலை மற்றும் மாலை இருவேளைகளிலும் நிர்ணயிக்கப்படுகின்றது.

கைரேகை வைக்காமல் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கலாமா??

கடந்த ஒரு வாரமாக தங்க விலை தொடர்ச்சியாக சரிந்து வந்தது. ஆனால், கடந்த இரு நாட்களாக எப்போதும் போல் உயர்ந்து வருகிறது. பண்டிகை நாளான இன்று கூட தங்க விலை உயர்ந்துள்ளது மக்களை கவலை அடைய வைத்துள்ளது.

இன்றைய விலை நிலவரம்:

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் (22 கேரட்) தங்கம் சவரனுக்கு 56 ரூபாய் அதிகரித்து ரூ.37,816 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு கிராம் 7 ரூபாய் உயர்ந்து ரூ.4, 720 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

தூய தங்கம் (24 கேரட்) ஒரு சவரன் ரூ.40,888 என்ற விலையிலும், ஒரு கிராம் ரூ.5,111 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகின்றது. ஒரு கிராம் வெள்ளி ரூ.71.20, ஒரு கிலோ ரூ.71,200 என்று விற்பனை செய்யப்படுகின்றது. இந்த விலை நிலவரத்தால் மக்கள் கவலை அடைந்துள்ளனர்

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழக வாகன ஓட்டிகளே., இனி இந்த இடங்களில் மின் கம்பங்கள் இருக்காது? மின்வாரியம் பிறப்பித்த உத்தரவு!!!

தமிழகத்தில் பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளை கவனிக்காமல் வரும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகிறது. சில...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -