சிபிஐ வசமிருந்த 103 கிலோ தங்கம் மாயம் – திருட்டு வழக்கு பதிவு செய்தது சிபிசிஐடி!!

0

சென்னையில் சிபிஐ வசமிருந்த சுமார் 103 கிலோ தங்கம் மாயமானது தொடர்பாக சிபிசிஐடி போலீஸ் திருட்டு வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இது காவல்துறையினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிபிசிஐடி:

நாட்டில் சட்ட விரோத செயல்கள் அதிகரித்து வருகின்றது. சென்னையில் உள்ள சுரானா நிறுவனத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டில் நடைபெற்ற சிபிஐ ரெய்டில் 400 கிலோ தங்க நகைகள் சிக்கியது. இது பறிமுதல் செய்யப்பட்டு சுரானா நிறுவனத்தின் லாக்கரிலேயே சிபிஐயின் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தது. அந்த நகைகளை சுரானா நிறுவனம் பல வங்கிகளிடமிருந்து கடன் வாங்கி வாங்கியுள்ளது என்று தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில் சிபிஐ கண்காணிப்பில் இருந்த 400 கிலோ தங்கத்தில் இருந்து சுமார் 103 கிலோ தங்கம் மாயமானது. இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கைரேகை வைக்காமல் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கலாமா??

தற்போது இந்த சம்பவம் குறித்து சிபிஐ அதிகாரிகளிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இதற்காக சிபிஐ அதிகாரிகள் மேல் சிபிசிஐடி அதிகாரிகள் திருட்டு வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் சிபிஐ அதிகாரிகளிடம், சிபிசிஐடி அதிகாரி ஒருவர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது விசாரணைக்காக சம்பந்தப்பட்ட சிபிஐ அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here