விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனா வீட்டை விட்டு போனதில் இருந்து மனதுடைந்து போன ஜீவா யாருக்கும் சொல்லாமல் குமுளிக்கு கிளம்பி விட்டார். இந்நிலையில் மீனா தான் செய்த தவறை நினைத்து வருந்துகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தற்போது மக்கள் மத்தியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. தனம் கர்ப்பமாக இருந்ததை அடுத்து அதனை யாருக்கும் சொல்லாமல் மறைக்கிறார். அடிக்கடி வாந்தி, மயக்கம் ஏற்படுவதால் ரூமிலேயே இருக்கும் தனத்தின் மீது அனைவர்க்கும் சந்தேகம் ஏற்படுகிறது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
மீனாவும் கோவித்துக் கொண்டு சென்று விட்டார். இதனால் அனைத்து பிரச்சனையும் ஜீவாவிற்கு தான். தனம் கர்ப்பமான விஷயத்தை சொல்லி இருந்தால் கண்டிப்பாக இவ்வளவு பிரச்சனைகள் நடந்திருக்காது. மூர்த்தியும், தனமும் இதனை கண்டுகொள்ளாமல் இருந்ததால் ஜீவாவிற்கு அவர்கள் மீது வெறுப்பு வருகிறது.
ஜீவா காணாமல் போன விஷயம் மீனாவிற்கு தெரியவர நேற்று முழுக்க புலம்பிக் கொண்டே இருந்தார். இன்றைய எபிசோடில் ஜனார்த்தனன் இது தான் சாக்கு என்று ஜீவாவை வீட்டோடு வைத்துக் கொள்ள திட்டம் போடுகிறார். ஜீவா அவரின் அண்ணன் மீது தான் கோவமாக இருக்கிறார். அந்த கோவத்தை அதிகரித்து ஜீவாவை இங்கேயே வைத்துக் கொள்வோம் என்றும் கூறுகிறார்.
‘வீட்டுக்கு மூத்த மகளா இருந்தா, அவங்க தானா என் அம்மா’ – பாரதியிடம் கேள்வி கேட்கும் ஹேமா!!
இதனை கேட்ட மீனா எதுவும் பேசாமல் உள்ளே செல்கிறார். அடுத்ததாக ஜீவாவின் அம்மா அவரை நினைத்து கவலைப்பட முல்லை சமாதானம் செய்கிறார். அப்பொழுது கதிர் அங்கே வர ஜீவாவை பற்றி விசாரிக்கின்றனர். ஜீவா குமுளிக்கும் போகவில்லை, அங்கு இருப்பவர்களுக்கும் கால் செய்யவில்லை என்று சொல்ல அனைவர்க்கும் பதட்டமாகிறது.
அடுத்து மீனாவும் இரவு முழுக்க தூங்காமல் அழுதுகொண்டே உள்ளார். தான் செய்த தவறை நினைத்து அழுகிறார். அந்த வீட்டை விட்டு வந்திருக்கவே கூடாது. இப்போ நடந்த எல்லா பிரச்சனைக்கும் காரணம் நீங்க தான் என்று ஜனார்த்தனனை சொல்கிறார் மீனா. இதோடு எபிசோடும் முடிவடைகிறது.