Tuesday, May 14, 2024

“விவசாய பொருட்களுக்கான ஆதார விலையை ரத்து செய்வதற்கு வாய்ப்பில்லை” – பிரதமர் மோடி திட்டவட்டம்!!

Must Read

மத்திய பிரதேச விவசாயிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அதில் விவசாய பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை ரத்து செய்யப்படாது என்று பிரதமர் மோடி திட்டவட்டமாக கூறியுள்ளார்.

வேளாண் சட்டங்கள் குறித்த உரை:

பிரதமர் மோடி தலைமையிலான அரசு புதிதாக 3 வேளாண் சட்டங்களை இந்த வருடம் கொண்டுவந்தது. இதை நாடு முழுவதிலும் உள்ள விவசாயிகள் எதிர்த்தனர். புதிய வேளாண் சட்டங்கள் எதுவும் விவசாயிகளுக்கு நன்மை ஏற்படுத்தும் வகையில் இல்லை, இதனால் பாதிக்கப்படுவது விவசாயிகள் தான் என்று கூறினர். மேலும் புதிய வேளாண் சட்டங்கள் அனைத்தும் வணிக நிறுவங்களுக்குத்தான் சாதகமாக உள்ளது என்றும் கூறி வேளாண் சட்டங்கள் அனைத்தையும் திரும்ப பெற சொல்லி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதற்காக 5 கட்டங்களாக மத்திய அரசு விவசாய சங்கங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியும் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிட வில்லை. இந்நிலையில் பிரதமர் மோடி, மத்திய பிரதேசத்தில் உள்ள விவசாயிகளுடன் கலந்து உரையாடினார். அவர் பேசியதாவது, “நாங்கள் விவசாயிகளின் வருமானத்தை அதிகமாகி, அவர்களின் பொருளாதாரம் மேம்பட வேண்டும் என்று விரும்புகிறோம். காங்கிரஸ் கட்சி விவசாயிகளின் பிரச்சனையில் வேடம் போடுகிறது, அவர்கள் செய்வது முதலை வடிக்கும் நீலிக்கண்ணீரை போல் உள்ளது”

‘சித்ரா மட்டும் இல்லை, ஹேமந்த் வலையில்’ – போலீஸ் விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்!!

“புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் நலனுக்காக அமைக்கப்பட்டது ஆகும். விவசாயிகளுக்காக இந்திய முழுவதும் குளிர்பதனகிடங்குகள் அமைக்கப்படும். புதிய தொழில்நுட்பவளர்ச்சி விவசாயிகளின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும். இது விவசாயிகளின் தற்கொலையை தடுக்கும். விவசாயிகளின் நலனிற்காக கொண்டு வந்த சட்டத்திற்காக நன்றி சொல்ல வேண்டாம்.நலமுடன் இருந்தாலே போதும். மேலும் விவசாய விலை பொருட்களுக்கான குறைந்த பட்ச ஆதார விலையை ரத்து செய்ய முடியாது” என்று பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழக மக்களே அலர்ட்டா இருங்க…, வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கை!!

சென்னை வானிலை ஆய்வு மையமானது, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் கிழக்கு திசை வேக மாறுபாடு காரணமாக அடுத்த 7 நாட்களுக்கு ஏற்பட...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -