சுங்கச்சாவடி இல்லாத இந்தியா – நிதின் கட்கரி அறிவிப்பு!!

0

அடுத்த 2 ஆண்டுகளில் சுங்கச்சாவடி இல்லாத இந்தியா உருவாகும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

நிதின் கட்கரி:

இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் (அசோசாம்) நிறுவன வாரத்தை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளில் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் தேசிய உள்கட்டமைப்பின் பங்கு என்னும் தலைப்பில் மத்திய போக்குவரத்து துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சரான நிதின் கட்கரி பேசினார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

“இந்தியா முழுவதும் சீரான போக்குவரத்து அமைவதற்கு சுங்கச்சாவடிகளில் ஜிபிஎஸ் தொழில்நுட்ப பயன்பாட்டின் முலம் நடத்துவதற்கு அரசு முடிவு செய்துள்ளது. தற்போது பயன் பாட்டில் இருக்கும் சுங்கச்சாவடிகளுக்கு பதில் ஜிபிஎஸ் மூலம் பணம் பரிவர்த்தனை  செய்வதற்கான திட்டம் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இதன் மூலம் அடுத்த 2 ஆண்டுகளில் சுங்கச்சாவடி இல்லாத இந்தியா உருவாகும் என்று அவர் கூறியுள்ளார். மேலும் இனி யாரு  சுங்கச்சாவடிகளில் காத்திருக்கும் நிலைய ஏற்படாது, வாகனங்களின் பயன்பாட்டை கருதியே அவரவர் வாங்கி கணக்கில் இருந்து நேரடியாக பணம் பெற்று கொள்ள படும். இந்த புது கட்டண முயற்சிக்கு அரசு அனுமதி அளித்துள்ளது.

மாநில முதல்வருக்கு கொரோனா தொற்று உறுதி – பொதுமக்கள் அதிர்ச்சி!!

இனி வரும் அனைத்து வாகனங்களிலும் ஜிபிஎஸ் பயன்பாட்டு கருவி பொருத்தப்பட்டிருக்கும்.  ஏனினும் பழைய வாகனங்களுக்கு அரசு வேறு மாற்று வழியை விரைவில் அறிவிக்கும் என்று கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் வரும் மார்ச் மாதத்திற்குள் சுங்கச்சாவடியில் இருந்து சுமார்  34,000 கோடி ரூபாய் வருமானம் வரும் என்றும் ஜிபிஎஸ் பயன்பாட்டிற்கு பின் அடுத்த 5 ஆண்டுகளில் சுமார் 1,34,000 கோடி வருவாய் கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here