மாநில முதல்வருக்கு கொரோனா தொற்று உறுதி – பொதுமக்கள் அதிர்ச்சி!!

0

இந்தியாவில் கொரோனா பரவல் சற்று குறைந்துள்ள நிலையில், இன்று உத்தரகண்ட் மாநில முதல்வர் திரிவேந்திர சிங் அவர்களுக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இது அம்மாநில மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

கொரோனா தொற்று:

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மத்திய அமைச்சர்கள் முதல் மாநில முதல்வர்கள் வரை தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது தடுப்பு மருந்து பரிசோதனையில் அரசு மும்முரமாக ஈடுபட்டு வருவதால் அடுத்த வருடத்திற்குள் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என கூறப்படுகிறது. ஏற்கனவே பிரிட்டன், ரஷ்யா, அமெரிக்கா போன்ற நாடுகளில் கொரோனா தடுப்பு மருந்து சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு??

சில நாட்களுக்கு முன்னர் உத்தரகண்ட் ஆளுநர் பேபி ராணி மௌரியா அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், தற்போது அம்மாநில முதல்வர் திரிவேந்திர சிங் அவர்களுக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இது குறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘பரிசோதனை முடிவில் எனக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. எனது உடல்நிலை சீராக உள்ளதால் மருத்துவர்களின் அறிவுரையின் பேரில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளேன். கடந்த சில நாட்கள் என்னுடன் தொடரில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்’ என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here