Wednesday, March 27, 2024

பிரசாத் ஸ்டுடியோவில் தியானம் செய்ய வழக்கு தொடர்ந்த இளையராஜா – பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!!

Must Read

தமிழ் திரையுலகில் பிரபல இசையமைப்பாளரான இளையராஜா 40 வருடங்களாக ரெகார்டிங் தியேட்டராக பயன்படுத்தி வந்த பிரசாத் ஸ்டுடியோவில் தியானம் செய்ய அனுமதிக்கலாமா?? என விளக்கம் கேட்டு தெரிவிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

பிரசாத் ஸ்டுடியோ:

தமிழ் திரையுலகில் மாபெரும் இசை கலைஞராக இருப்பவர் இசைஞானி இளையராஜா. பல படங்களில் இசையமைத்து பலரின் நெஞ்சங்களை கொள்ளைகொண்டவர். இவரது பாட்டுக்களை கேட்டு மயங்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இந்நிலையில் இளையராஜா 40 வருடங்களாக பிரசாத் ஸ்டுடியோவை ரெகார்டிங் தியேட்டராக பயன்படுத்தி வந்தார்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

ஆனால் அதனை காலி செய்ய சொல்லி வற்புறுத்தியதால் இளையராஜாவிற்கு பிரசாத் ஸ்டுடியோவிற்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் அவர் தான் இதனை இத்தனை நாட்கள் பயன்படுத்தினார், அந்த பிரசாத் ஸ்டுடியோவில் ஒரு நாள் தியானம் செய்ய அனுமதிக்குமாறும், தான் கைப்பட எழுதிய மியூசிக் பைல், அவார்ட் என அனைத்தையும் எடுத்துக்கொள்ள அனுமதியளிக்குமாறும் உத்தரவிட வேண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

பொங்கல் பரிசுடன் அனைவருக்கும் ‘ஆவின் பால் பவுடர்’- பால் உற்பத்தியாளர் சங்கம் வேண்டுகோள்!!

இந்நிலையில் அந்த மனுதாக்கல் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அதில் பிரசாத் ஸ்டுடியோவிற்கு சார்பாக வழக்காடிய வழக்கறிஞர்கள் ஸ்டுடியோவில் உள்ள அனைத்து பொருட்களும் பத்திரமாக இருப்பதாகவும், எப்பொழுது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம் என்று கூறியுள்ளார். மேலும் அந்த ஸ்டுடியோவில் ஒரு நாள் தியானம் செய்வது குறித்து பிரசாத் ஸ்டுடியோவிடம் கேட்டு தெரிவிப்பதாக கூறியுள்ளனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு அகவிலைப்படி & HRA உயர்வு., மாஸ் அறிவிப்பை வெளியிட்ட தெலுங்கானா!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2024 ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி (DA) 4 சதவீதம் உயர்த்தியது முதல் பல்வேறு மாநில அரசுகளும், தங்களது ஊழியர்களுக்கு DA உயர்வை...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -