Sunday, May 5, 2024

எண்ணெய்பசை சருமமா?? வீட்டிலேயே சரி செய்ய எளிய டிப்ஸ்!!

Must Read

எண்ணெய்ப்பசை உள்ளதால் முகப்பருக்கள், கரும்புள்ளிகள் என்று கூடுதல் கவலை அளிக்கும் விஷயங்கள் வேறு சேர்ந்து கொள்ளும். எண்ணெய்ப்பசை பிரச்சனையை எப்படி சரி செய்வது என்று பாக்கலாம் வாங்க.

எண்ணெய்ப்பசை பிரச்சனை:

எண்ணெய்ப்பசை முகத்தில் குறைவாக இருப்பவர்களுக்கு விரைவிலேயே முகச்சுருக்கம் ஏற்பட்டு விடும். ஆனால் எண்ணைப்பசையுடன் இருக்கும் சருமத்தில் முகச்சுருக்கம் போன்ற பாதிப்புகள் விரைவில் வராது. காரணம் தோல் எண்ணைப்பசையுடன் இருப்பதால் வறட்சி ஏற்படாது. ஆனால் இது ஒரு அளவிற்கு மேல் அதிகமாக இருந்தால் தான் பாதிப்பு. எண்ணெய்பசைசருமத்தை சில விஷயங்களை செய்துகொண்டாலே சரி செய்து விடலாம். அதுவும் நமது வீட்டில் இருந்தபடியே எளிமையாக செய்யலாம்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

எண்ணெய்ப்பசை சருமம் உள்ளவர்கள் சோப்பு பயன்படுத்துவத்தை தவிர்க்க வேன்டும். பிறகு கைகளை முகத்திற்கு கொண்டு செல்ல கூடாது. அப்படி தொடுவதால் கைகளில் இருக்கும் அழுக்குகள் எளிதாக முகத்தில் தங்கி விடும். இதனால் பருக்களும் வர ஆரம்பிக்கும்.

ஸ்கிரப்:

தக்காளி, உருளைக்கிழங்கு,ஆப்பிள், பப்பாளி முதலிய பழங்களை மசித்து அதனுடன் 1 டேபிள் ஸ்பூன் சர்க்கரை சேர்த்து 10 நிமிடங்கள் முகத்தில் ஸ்கிரப் செய்ய வேண்டும்.

கற்றாழை மசாஜ்:

கற்றாழை என்பது சரும பராமரிப்பில் முக்கி பங்கு வகிக்கிறது. தினமும் இரவில் கற்றாழையின் ஜெல்லை முகத்தில் தடவி வர வேண்டும்.

ஆலிவ் எண்ணெய்:

தினமும் இரவில் தூங்குவதற்கு முன்பு ஆலிவ் எண்ணையை முகத்தில் தடவி கொள்ள வேண்டும். ஆலிவ் சருமத்திற்கு புத்துணர்ச்சியை அளிக்கிறது. சருமத்தில் உள்ள நீக்கி எண்ணெய் சுரக்கும் தன்மையை கட்டுப்படுத்துகிறது.

முட்டை மாஸ்க்:

முட்டையின் வெள்ளை கருவுடன், பயத்தமாவு, அரிசிமாவு, ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் மாஸ்க் போட்டுக்கொள்ளலாம்.15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி விட வேண்டும்.

வெள்ளரிக்காய் மாஸ்க் :

வெள்ளரிக்காயை துருவி அதில் தயிர் சேர்த்து கலந்து 10 நிமிடங்கள் முகத்தில் மாஸ்க் போட வேண்டும். இதனால் எண்ணெய்ப்பசை முகத்தில் இருந்து நீக்கப்படும்.

தக்காளி மாஸ்க்:

தக்காளியின் சாறு மற்றும் தென் இரண்டையும் சம அளவில் எடுத்து 20 நிமிடங்கள் ஊற வைத்து கழுவினால் முகம் எண்ணெய்ப்பசை இல்லாமல் பளிச்சென்று இருக்கும்.

புதினா டோனர் :

சிறிது புதினா இலைகளை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து ஆற வைக்க வேண்டும். இதனை பஞ்சை வைத்து நினைத்து முகத்தில் தடவலாம், இந்த முறை எண்ணெய்பசையை முற்றிலும் கட்டுப்படுத்தும்.

ஐஸ் கட்டிகள்:

ஐஸ் கட்டிகளை வைத்து சிறிது நேரம் முகத்தில் மசாஜ் செய்தால் முகத்தில் உள்ள தோலானது இறுகி எண்ணைப்பசையை கட்டுப்படுத்தும்.

இதைத்தவிர பொதுவாகவே எண்ணெய்ப்பசை சருமம் உள்ளவர்கள் துரித உணவுகள், எண்ணையில் பொரித்த உணவுகள், உப்பு அதிகம் உள்ள உணவுகள் போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -