Sunday, May 5, 2024

மீண்டும் தடாலடியாக உயர்ந்த தங்க விலை – இன்றைய விலை நிலவரம்!!

Must Read

தமிழகத்தில் தங்கத்தின் விலை பல வித மாற்றங்களுடன் தான் இருந்து வருகின்றது. நேற்று தடாலடியாக உயர்ந்து மக்களை கவலை அடைய வைத்த இன்றும் அதிரடியாக உயர்ந்துள்ளது. இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்ச்சியாக உயர்ந்து வரும் தங்க விலை:

பொது முடக்கம் அமல்படுத்தப்பட்ட காரணத்தால் தொழில் முனைவோர்கள் தங்களது எதிர்கால நலன் கருதி தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீடு செய்ய ஆரம்பித்தனர். இதனை அடுத்து தங்கத்தின் தேவை அதிகரித்து விலை தாறுமாறாக உயர்ந்தது. உச்சகட்டமாக ஒரு சவரன் 43 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் மிகவும் கவலை அடைந்தனர்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

படிப்படியாக தளர்வுகள் அரிப்பதாலும், தங்கத்தின் விலை அதே நிலவரத்தில் தான் இருந்து வந்தது. சுபநிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டவர்கள் மிகுந்த வருத்தம் அடைந்தனர். இந்த மாதம் விலை நிலவரத்தில் அதிக அளவு மாறுதல் ஏற்பட்டு வந்தது. விலை குறைந்தாலும் அதிரடியாக குறைந்தது, உயர்ந்தாலும் தடாலடியாக உயர்ந்தது. இது மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது.

இன்றைய விலை நிலவரம்:

இப்படியான நிலையில், நேற்று தங்க விலை தடாலடியாக உயர்ந்தது. இன்று மீண்டும் உச்சகட்டமாக சவரனுக்கு 100 ரூபாய்க்கு மேல் அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் (22 கேரட்) ஒரு சவரன் 136 ரூபாய் உயர்ந்து ரூ.37,360என்ற விலை நிலவரத்தில் உள்ளது. ஒரு கிராம் 17 ரூபாய் உயர்ந்து ரூ.4,670 என்று விற்பனை செய்யப்படுகிறது.

வரலாற்றில் முதல்முறை – 46,599 புள்ளிகளை கடந்த இந்திய பங்குச்சந்தை! முதலீட்டாளர்கள் செம ஹாப்பி!!

தூய தங்கம் (24 கேரட்) ஒரு கிராம் 17 ரூபாய் உயர்ந்து ரூ.5,031 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு சவரன் தங்கம் 136 ரூபாய் உயர்ந்து ரூ.40,258 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெள்ளியின் விலையும் நேற்றைய விலையை விட உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.68.90 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ வெள்ளி ரூ.68,900 என்று விற்பனை செய்யப்படுகிறது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -