Saturday, May 4, 2024

ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்திற்கு முதுகில் வலி – டெஸ்ட் தொடரில் விளையாடுவாரா??

Must Read

இந்தியா ஆஸ்திரேலியா வலை பயிற்சி ஆட்டத்தின் போது ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மிதிற்கு முதுகில் வலி ஏற்பட்டதால் டிசம்பர் 17 ஆம் தேதி நடக்க இருக்கும் முதல் டெஸ்ட் தொடரில் விளையாடுவாரா? என கேள்வி எழுந்துள்ளது.

இந்தியா vs ஆஸ்திரேலியா அணி:

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. அதில் ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியாவும், டி20 தொடரை இந்தியாவும் கைப்பற்றிய நிலையில் வரும் 17 ஆம் தேதி முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆரம்பமாக உள்ளது. அதற்கு இந்திய அணி வீரர்கள் ஆயத்தமாகும் வகையில் பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய ஏ அணியுடன் விளையாடி வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் ஆஸ்திரேலியா வீரர்கள் பலர் காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகியுள்ளனர். முதல் டெஸ்ட் போட்டியில் டேவிட் வார்னர் மற்றும் வில் புக்கோவ்ஸ்கி விலகினார்கள். மேலும் இந்தியா ஆஸ்திரேலியா எதிரான 2-வது பயிற்சி ஆட்டத்தில் அபாட்டுக்கு காயம் ஏற்பட்டது. எனவே அவரும் முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து விலகினார். உடற்தேர்வில் தேர்ச்சி அடைந்தால் மட்டுமே போட்டிகளில் விளையாட முடியும் என ஜஸ்டின் லாங்கர் கூறியுள்ளார்.

10 நிமிஷத்துல பட்டுனு ஒரு ஸ்னாக்ஸ் – “உருளைக்கிழங்கு கட்லெட்” செய்யலாம் வாங்க..!

இந்நிலையில் இன்று ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மிதிற்கு முதுகில் வலி ஏற்பட்டதால் மைதானத்தை விட்டு சென்று ஓய்வு எடுத்தார். அதனால் அவரும் டெஸ்ட் தொடரில் விளையாடுவாரா? என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து ஆஸ்திரேலியாவின் முன்னி வீரர்கள் விளங்கியுள்ளது அந்த அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு.., புதிய பெயர் சேர்க்க வேண்டுமா? அப்ப உடனே இத பண்ணுங்க!!!

தமிழகத்தில் உள்ள ஏழை எளிய குடும்பங்கள் பயன்பெறும் வகையில் தமிழக அரசு ரேஷன் கார்டு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மலிவு விலையில் உணவுப் பொருட்களை...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -