10 நிமிஷத்துல பட்டுனு ஒரு ஸ்னாக்ஸ் – “உருளைக்கிழங்கு கட்லெட்” செய்யலாம் வாங்க..!

0

சாயங்கால நேரம் வந்தாலே எதாவது ஒரு ஸ்னாக்ஸ் சாப்பிடணும்ன்னு தோண ஆரம்பிச்சுரும். இது மழை காலம் என்கிறதால சாயங்கால டீ கூட எதாவது கொறிக்க இருந்தால் நல்ல இருக்கும்னு நம்ம வீட்ல இருக்குறவங்களும் கேப்பாங்க. அப்படி கேக்கும் போது இந்த “உருளைக்கிழங்கு கட்லெட்” செஞ்சு குடுத்து உங்க குழந்தைகளையும், குடும்பத்தில் உள்ளவர்களையும் அசத்துங்க. மொறு மொறுனு சுவையான “உருளைக்கிழங்கு கட்லெட்” எப்படி செய்யலாம்னு பாக்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு – 4
மஞ்சள் தூள் – 1 டீ ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
மல்லித்தூள் – 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
கரம் மசாலா – 1 டீ ஸ்பூன்
சாட் மசாலா – 1 டீ ஸ்பூன்
பிரட் கிரம்ஸ் – 5 டேபிள் ஸ்பூன்
பெரிய வெங்காயம் – 1
மல்லித்தழை – 1 கை அளவு

செய்முறை:

முதலில் உருளைக்கிழங்கை நன்கு வேக வைத்துக் கொள்ள வேண்டும். அது ஆறியதும் தோலை உரித்து மசித்துக் கொள்ள வேண்டும். இதை தனியாக வைத்துக் கொள்ளவும். பிறகு ஒரு பௌலில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மில்லிதூள், உப்பு, சீரகம், கரம் மசாலா, சாட் மசாலா, பிரட் கிரம்ஸ், மல்லித்தழை இவற்றை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இப்பொழுது அதில், உருளைக்கிழங்கை சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

“கிறிஸ்துமஸ் புட்டிங்” ரெசிபி!!

இந்த கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.பிறகு வட்டமாக தட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும். தோசைகல்லில் போட்டு சுட்டும் எடுக்கலாம். நல்ல மொறு மொறுப்பாகும் வரை பொறித்து எடுக்கவும். இப்பொழுது சூடான, சுவையான, மொறு மொறுப்பான ” உருளைக்கிழங்கு கட்லெட்” ரெடி!!! பரிமாறும் போது தக்காளி சாஸ் அல்லது புதினா சட்னி வைத்து கொடுத்தால் கூடுதல் சுவையுடன் இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here