“கிறிஸ்துமஸ் புட்டிங்” ரெசிபி – வீட்ல செஞ்சு அசத்துங்க!!

0

கிறிஸ்துமஸ் விருந்துனு சொன்னாலே முதல்ல முக்கியமான விஷயம் கிறிஸ்துமஸ் கேக் அல்லது கிறிஸ்துமஸ் புட்டிங். இங்கிலாந்து, அயர்லாந்து மற்றும் பிரிட்டிஷில் இருந்து மற்ற நாடுகளுக்கும் கொண்டுவரப்பட்ட பாரம்பரியமான ரெசிபி “கிறிஸ்துமஸ் புட்டிங்” ஆகும். இந்த கிறிஸ்துமஸ்க்கு நம்ம வீட்லயும் இந்த கிறிஸ்துமஸ் புட்டிங் செய்ஞ்சு கிறிஸ்துமசை சிறப்பா கொண்டாடுவோம். சுவையான இந்த “கிறிஸ்துமஸ் புட்டிங்” எப்படி செய்யலாம்னு பாக்கலாம் வாங்க….

தேவையான பொருட்கள்:

ஆரஞ்சு ஜூஸ் – 1/4 கப்
மைதா – 1/2 கப்
பிரட் கிரம்ஸ் – 1/2 கப்
உப்பில்லாத வெண்ணெய் -75 gm (துருவி வைத்தது )
பட்டை பொடி -1/2 டீ ஸ்பூன்
கிராம்பு பொடி – 1/4 டீஸ்பூன்
சர்க்கரை – 1/3 கப்
பேக்கிங் பவுடர்-1/2 டீ ஸ்பூன்
ஆப்பிள் – 1/2 துருவியது
எலுமிச்சை தோல் – 1(பழம் )
முட்டை – 1
தேன் – 1 டேபிள் ஸ்பூன்
உலர்ந்த பழங்கள் – 3 கப் ( எந்த உலர் பழங்கள் தேவையோ அவை )

செய்முறை:

இந்த புட்டிங் செய்வதற்கு 2 நாட்களுக்கு முன்னதாகவே உலர் பழங்கள் அனைத்தையும் ஆரஞ்சு ஜூஸ்ஸில் ஊற வைக்க வேண்டும். உலர் பழங்கள் அனைத்தையும் ஒரு காய்ந்த கன்டைனரில் போட்டு அதில் ஆரஞ்சு ஜூஸை ஊற்றி பிரிட்ஜ்ல் வைக்க வேண்டும். புட்டிங் செய்யும் போது அதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

முதலில் ஒரு பௌலில் உலர் பழங்களை தவிர மற்ற பொருட்கள் அனைத்தையும் எடுத்துக் கொள்ள வேண்டும். இவற்றை நன்கு கலந்து விட வேண்டும். பின்னர் இதில் ஆரஞ்சு ஜூஸில் ஊற வைக்கப் பட்ட பழங்களை சேர்த்து கலந்து விட வேண்டும்.

இந்த கலவையை அரை லிட்டர் அளவுள்ள ஒரு கண்ணாடி பௌலில் மாற்ற வேண்டும். அதற்க்கு முன்னதாக பௌளையும், பார்ச்மெண்ட் பேப்பரையும் வெண்ணெய் அல்லது எண்ணெய் வைத்து எல்லா தடவி விடவும். இப்பொழுது பௌலின் மேல் பார்ச்மெண்ட் பேப்பரை வைக்க வேண்டும். அதன் மேல் ஒரு பாயில் பேப்பரை வைத்து ரப்பர் பேண்ட் போட்டுக் கொள்ள வேண்டும்.

கர்ப்பமான உண்மையை மூர்த்தியிடம் கூறிய தனம்!!!

இப்பொழுது ஒரு பேனில் பாதி அளவு தண்ணீர் வைத்து அதில் இந்த புட்டிங் பௌளை வைக்க வேண்டும். ஒரு மணி 45 நிமிடங்கள் இந்த பானை அடுப்பில் வைத்து கொதிக்க விட வேண்டும். இப்பொழுது ஒரு பல் குத்து குச்சியை வெந்து விட்டதா என்று பார்த்து அடுப்பில் இருந்து இறக்கவும். 10 நிமிடங்கள் ஆரிய பிறகு ஒரு தட்டில் தலைகீழாக வைத்து புட்டிங்கை எடுக்க வேண்டும். இப்பொழுது சுவையான “கிறித்துமஸ் புட்டிங்”
ரெடி!!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here