தமிழகத்தில் தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு?? புதிய சிக்கல்!!

0

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதில் புதிதாக சிக்கல் ஒன்று உருவாகியுள்ளது. சென்னை ஐஐடி மாணவர்களுக்கு கொரோனா தொற்று அதிகரித்திருக்கும் நிலையில் பள்ளிகள் திறப்பது தள்ளிப்போடப்படும் என தகவல்கள் கூறுகின்றன.

பள்ளிகள் திறப்பில் சிக்கல்:

கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டன. கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் கல்லூரிகள் திறக்கப்பட்டன. பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என அனைவரும் கேள்வி எழுப்பும் நிலையில் ஜனவரி மாதம் பள்ளிகள் திறக்க வாய்ப்புக்கள் உள்ளதாக தகவல்கள் வந்தன.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ள நிலையில் கல்லூரிகள் இந்த மாதம் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் தற்போது கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி வளாகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 104 ஆக உயர்ந்துள்ளது. இதனால் மீண்டும் ஐஐடி மூடப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

முதுநிலை பட்டப்படிப்பு, இளநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் முதற்கட்டமாக டிசம்பர் 7ஆம் தேதி முதல் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. சென்னை ஐஐடி வளாகத்தில் புதிதாக 66 மாணவர்கள், 5 ஊழியர்கள் உட்பட 71 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அங்கு பாதிப்பு எண்ணிக்கை 104ஆக உயர்ந்துள்ளது.

Chennai IIT
Chennai IIT

ஐஐடி மாணவர்கள் உட்பட 444 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் கிண்டி கிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சென்னை ஐஐடியில் வகுப்புகள் தொடங்கிய ஒரு வாரத்துக்குள் நூறுக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு JEE நுழைவுத்தேர்வு இலவச பயிற்சி!!

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தற்போது 1200க்கும் குறைவாக இருக்கிறது. பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கு எந்த நேரமும் அரசு தயார் நிலையில் உள்ளதாக கூறினார். மேலும், மாணவர்களும், பெற்றோர்களும் கூறும் கருத்துகளின் அடிப்படையில் தான் பள்ளிகள் திறப்பது பற்றி முதல்வர் முடிவெடுப்பார் என்றும் கூறினார்.

Minister Sengottaiyan
Minister Sengottaiyan

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு குறித்த அறிவிப்பு வெளியான போது அதற்கு கல்வியாளர்கள், பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மற்ற மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்ட போது ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் தொற்று அதிகரித்தது. மேலும், ஐஐடி கல்லூரி மாணவர்கள் பாதிப்புக்கு உள்ளானதால் பள்ளி மாணவர்களும் குழந்தைகள் தானே அவர்களால் எவ்வாறு முகக்கவசம், தனிமனித இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற முடியும்? அதனால் பாதிப்பு அதிகரிக்கும். இவற்றின் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு மீண்டும் தள்ளிப் போக வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here