Wednesday, May 1, 2024

இந்த 3 வீரர்களிடம் கவனமாக இருக்க வேண்டும் – சச்சின் டெண்டுல்கர் விடுத்த எச்சரிக்கை!!

Must Read

ஆஸ்திரேலியா இந்தியாவிற்கு இடையேயான டெஸ்ட் தொடர்கள் நடக்கவிருக்கும் நிலையில் இந்திய அணியின் வீரர்களுக்கு சச்சின் ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆஸ்திரேலிய அணியில் 3 முக்கிய வீரர்கள் பங்கேற்பதால் இந்திய அணி வீரர்கள் கவனமுடனும் எச்சரிக்கையுடனும் விளையாட வேண்டும் என கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியா vs இந்திய டெஸ்ட் தொடர்:

2018-19ம் ஆண்டு நடந்த டெஸ்ட் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை அவர்கள் மண்ணிலே வெற்றி கொண்டது. இந்த வருடமும் நடக்கவிருக்கும் டெஸ்ட் தொடர் பற்றி பிரபல கிரிக்கெட் வீரர் இந்தியாவின் ஜாம்பவான் சச்சின் அவர்கள் தனது கருத்தை எச்சரிக்கையாக இந்திய அணி வீரர்களுக்கு தெரிவித்துள்ளார்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

இது குறித்து சச்சின் கூறியதாவது, “கடந்த வருடம் ஆஸ்திரேலியா அணியை அவர்கள் மண்ணிலே வீழ்த்தியது 72 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறை. இந்திய அணி அப்போது பலமாக இருந்தது. அதுமட்டுமல்ல ஆஸ்திரேலிய அணியின் 3 முக்கிய வீரர்கள் ஸ்மித், வார்னர், லபுசேன் அந்த அணியில் இல்லை, காரணம் பந்தை சுரண்டிய காரணத்தால் ஸ்மித் மற்றும் வார்னர் நீக்கப்பட்டனர். லபுசேன் அப்போது அறிமுகமாகவில்லை. பொதுவாக சீனியர் வீரர்கள் இல்லை என்றால் அது வெற்றிடம் போலாகும்”

நன்றாக விளையாடுங்கள்:

“இந்த வருடம் 3 முன்னனி வீரர்களும் இருக்கிறார்கள், இது அந்த அணிக்கு பலம் ஆகும். அதனால் இந்திய வீரர்களுக்கு இது நெருக்கடியாக இருக்கும். ஆஸ்திரேலிய அணி வலுவாக இருந்தாலும், இந்திய அணியின் பந்துவீச்சு பலமாக இருப்பதை அவர் சுட்டிக் காட்டி இருக்கிறார். ஸ்விங் செய்வது, விதவிதமாக பந்து வீசுவது, எதிர்பாராத முறையில் பந்து வீசுவது, ரிஸ்ட் ஸ்பின், பிங்கர் ஸ்பின் என அனைத்து வகையான பந்துவீச்சும் உள்ளது”

தமிழகத்தில் டிச.16 முதல் கனமழை வெளுத்து வாங்கும் – சென்னை வானிலை மையம் தகவல்!!

“மேலும் ஒவ்வொரு தொடரையும் தனித்தனியாக பார்க்க வேண்டும். ஒன்றோடு ஒன்று ஒப்பிட்டு பார்க்க கூடாது. தற்போது இந்திய அணி பந்து வீச்சில் பலமாக உள்ளது. அதனால் எங்கு விளையாடுகிறோம் யாருடன் மோதுகிறோம் என்பதெல்லாம் ஒரு பொருட்டல்ல. வெவ்வேறு விதமான பந்து வீச்சாளர்கள் இருக்கிறீர்கள் சிறப்பான சுழற்பந்து வீச்சாளர்களும் இருக்கிறீர்கள். நம்பிக்கையுடன் விளையாடுங்கள்” என்று கூறினார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

36 வது முறையாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு.. வெளியான முக்கிய தகவல்!!

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தனர். அதைத்தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் படி, புழல்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -