டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் பணி வழங்கவில்லை – முதல்வர் வீட்டை முற்றுகையிட்ட ஆசிரியர்கள்!!

0

டெட் தேர்வு சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் என்று அறிவித்த நிலையில் இன்னும் பணி நியமன ஆணை வரவில்லை என்று தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டின் முன்பு முற்றுகையிட முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

டெட் தேர்வு:

நாடு முழுவதும் அரசுப் பள்ளி ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்காக CTET எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதனை தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் (NCTE) நடத்தி வருகின்றது. இதேபோல் மாநிலங்களில் அரசுப் பள்ளி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் சார்பில் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டால் காலிப் பணியிடங்களுக்கு ஏற்ப ஆசிரியர் பணி வழங்கப்படும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆசிரியர் தகுதித் தேர்வான டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ், இனி ஆயுள் முழுவதும் செல்லும் என்று தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் கடந்த அக்டோபர் மாதம் 21-தேதி அறிவித்தது. ஆனாலும் அதில் தேர்ச்சி பெற்ற 2144 பேரில் 329 பேருக்கு மட்டும் பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை ஆசிரியர்கள் சார்பாக சென்னை பசுமைவழி சாலையில் உள்ள முதலமைச்சர் வீடு முன்பு முற்றுகையிட்டனர்.

அடுத்த 6 மாதங்கள் மோசமான கால கட்டமாக இருக்கும்!!

இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையில் முதல்வரின் தனிப்பிரிவு அலுவலர்களுடன் இருவர் மட்டும் பேசி மனு அளிக்க அனுமதி வழங்கப்பட்டது. அவர்கள் அளித்த மனுவில் முதல்வர் விரைவில் தலையிட்டு பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here