அடுத்த 6 மாதங்கள் மோசமான கால கட்டமாக இருக்கும் – பில்கேட்ஸ் எச்சரிக்கை!!

0

அடுத்து வரும் 4 முதல் 6 மாதங்கள் வரை மோசமான காலமாக இருக்கலாம் என உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான பில்கேட்ஸ் கூறியுள்ளார். கொரோனா நோய்த்தொற்று மிகவும் ஆபத்தானது. கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக மக்கள் பலவகையில் துன்பமடைந்ததை எண்ணி அவர் இவ்வாறு கூறினார்.

பில்கேட்ஸ்:

வில்லியம் ஹென்றி கேட்ஸ் (பில் கேட்ஸ்) மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரும், பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் இணைத் தலைவருமாவார். கோர்பிஸ் நிறுவனத்தினையும் நிறுவியுள்ளார். போர்பஸ் இதழின்படி உலகின் முதல் பணக்காரர் என்று அறியப்படுகிறார். உலகின் பெரும் செல்வந்தர்கள் பட்டியலில் தொடர்ந்து பன்னிரெண்டு ஆண்டுகளாக முதல் இடத்தினைப் பெற்று வருகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அவர் கொரோனா நோயின் தாக்கம் பற்றியும், அதனால் மக்களுக்கு வந்த சூழ்நிலைகளை பற்றி கூறினார். அவர் கூறியது, சமீபகாலமாக அமெரிக்காவில் மக்கள் கொரோனா தொற்றின் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதும் அதனால் மரணங்கள் ஏற்படுவதும் அதிகரித்துள்ளது. அடுத்த நான்கு முதல் ஆறு மாதங்கள் கொரோனா வைரஸ் தொற்றுநோய்யின் மோசமான காலமாக இருக்கலாம்.

இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் மெட்ரிக்ஸ் அண்ட் எவல்யூஷன் (IHME) கணக்கின்படி மேலும் 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனா பாதிப்பால் மரணமடையலாம். முக கவசம் அணிவது, சமூக இசைவெளியை பின்பற்றுவது போன்ற விதிகளை பின்பற்றினால் அந்த இறப்புகளில் பெரும் சதவீதத்தை நாம் தவிர்க்க முடியும்.

அமெரிக்காவில் 290,000 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2015ம் ஆண்டு நான் எடுத்த கணக்கெடுப்பின் படி இறப்பின் விகிதம் அதிகரிக்கும் என்றேன் ஆனால் இந்த வைரஸ் நான் 5 ஆண்டுகளுக்கு முன் எடுத்த கணக்கெடுப்பைவிட அதிகமாக உள்ளது.

அவசர காலங்களில் தேவைப்படும் நோய்யறிதல், தடுப்பு மருந்து கண்டுபிடிப்புகளில் அறிவியல் எங்குள்ளது என்பது தெரிந்ததே. தோற்று நோய்க்கான நிபுணத்துவம் வளரும் நாடுகளின் வளர்ச்சி பாதையில் தொடர்புடையதே. மனிதர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் மற்ற நாடுகளுக்கு தடுப்பு மருந்து கொடுக்கும் முன் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை அளித்து அந்நாட்டு மக்களுக்கு விநியோகம் செய்கிறார் அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப்.

நாளை முதல் குற்றாலத்தில் பொதுமக்கள் குளிக்க அனுமதி!!

மருந்து என்பது அனைவர்க்கும் பயன்படுத்துவதற்க்காக மட்டுமே, பொருளாதாரத்தில் உயர்ந்தவர்களுக்கு மட்டும் அல்ல. முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன், ஜார்ஜ் புஷ் மற்றும் பராக் ஒபாமா ஆகியோர் தடுப்பூசி குறித்த மக்களின் நம்பிக்கையை அதிகரிப்பதாக கூறியுள்ளதால் தடுப்பூசியை பகிரங்கமாக எடுத்துக்கொள்வதாக அவர் கூறினார். நானும் அதை தான் கூறுகிறேன் என்றார்.

எனது அறக்கட்டளையும் தடுப்பு மருந்து கண்டுபிடிப்புக்கு நிறைய நிதிஉதவி அளித்துள்ளது. தடுப்பூசிகளின் திறனையும் நாம் அதிகரிக்க வேண்டும். உற்பத்திக்கு சில மாதங்களில் கூடுதல் ஒப்புதல் அளிக்கப்படும். அமெரிக்கா மற்ற நாடுகளின் வேலை பராமரிப்பிலிருந்து பயனடைந்துள்ளது. நாம் முன்னேற்றம் என்பதில் முற்றிலும் சுயநலமாக இருக்கக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here