Sunday, May 5, 2024

தமிழகத்தில் 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு – 18 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!!

Must Read

தமிழகத்தில் உள்ள 50 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு வேலை வாய்ப்பினை வழங்க முதல்வர் பழனிசாமி 18 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார். இந்த அனைத்து ஒப்பந்தங்களும் மின்சார வாகனங்கள் உற்பத்தி, சூரிய மற்றும் காற்றாலை சக்தி போன்ற துறைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வேலைவாய்ப்பிற்கான திட்டங்கள்:

தமிழகத்தில் உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்க வேண்டும் என்ற நோக்கில் அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதில் ஒரு பகுதியாக தற்போது முதலமைச்சர் பழனிசாமி 18 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

இது 19,995 கோடி ரூபாய் முதலீட்டிலும், 26,500 பேருக்கு வேலைவாய்ப்பினை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் 27,324 பேருக்கு வேலை கிடைக்கும் வகையில் 4456 கோடி ரூபாய் முதலீட்டில் 5 தொழிற் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் உள்ளார்.

நிறுவனங்களின் ஒப்பந்தங்கள்:

  • ola electric mobility நிறுவனம் – கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் – 2,354 கோடி ரூபாய் முதலீடு – 2,182 பேருக்கு வேலைவாய்ப்பு – மின்சார இரு சக்கர வாகனங்கள் உற்பத்தி திட்டம்
  • Torrent gas chennai private limited நிறுவனம் – திருவள்ளூர் – 5000 கோடி ரூபாய் – 5000 பேருக்கு வேலைவாய்ப்பு – நகர எரிவாயு விநியோகம்
  • first solar நிறுவனம் – 4,185 கோடி ரூபாய் முதலீடு – 1,076 நபர்களுக்கு வேலை வாய்ப்பு – உற்பத்தி திட்டம்
  • Society for smart electric mobility நிறுவனம் – 2,500 கோடி ரூபாய் முதலீடு – 1000 பேருக்கு வேலைவாய்ப்பு – மின்சார வாகனங்களுக்கான தொழிற்பூங்கா.
  • Voltas நிறுவனம் – காஞ்சிபுரம் – 1001 கோடி ரூபாய் முதலீடு – 2000 பேருக்கு வேலைவாய்ப்பு – குளிர் சாதன பெட்டி தயாரிக்கும் பணி.
  • Mylan laboratories நிறுவனம் – கிருஷ்ணகிரி – 350 கோடி ரூபாய் முதலீடு – 250 பேருக்கு வேலைவாய்ப்பு – மருந்து உற்பத்தி திட்டம்.
  • Gurit india private limited நிறுவனம் – காஞ்சிபுரம் – 320 கோடி ரூபாய் முதலீடு – 300 பேருக்கு வேலைவாய்ப்பு – உதிரி பாகங்கள் உற்பத்தி திட்டம்.
  • Yaclass நிறுவனம் – சென்னை – 300 கோடி ரூபாய் – 1000 பேருக்கு வேலைவாய்ப்பு
  • KPR Sugar and apparels ltd நிறுவனம் – திருப்பூர் – 200 கோடி ரூபாய் முதலீடு – 5000 பேருக்கு வேலைவாய்ப்பு – ஜவுளி ஆலை உற்பத்தி திட்டம்.
  • Magnus infrastructure நிறுவனம் – திருவள்ளுர் – 200 கோடி ரூபாய் முதலீடு – 150 பேருக்கு வேலைவாய்ப்பு – பொருளாதார மண்டலம்.
  • stanadyne நிறுவனம் – 180 கோடி ரூபாய் முதலீடு – 1500 பேருக்கு வேலைவாய்ப்பு – பம்ப் உற்பத்தி.
  • Mahindra CIE நிறுவனம் – கிருஷ்ணகிரி – 50 கோடி ரூபாய் முதலீடு – 220 பேருக்கு வேலைவாய்ப்பு.

இது போன்ற இன்னும் சில நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -