நான் எம்ஜிஆர் இன் நீட்சி – மதுரையில் கமல்ஹாசன் பேட்டி!!

0

சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தை துவங்க மதுரைக்கு வந்த கமலஹாசன் கொரோனா கட்டுப்பாடு விதிகள் காரணமாக பேச தடை விதிக்கப்பட்டது. இதனால் அவரது பேச்சை கேட்க காத்திருந்த தொண்டர்கள் பெரிதும் ஏமாற்றமடைந்தனர்.

வரும் 2021 சட்டமன்ற தேர்தலையொட்டி அனைத்து கட்சிகளும் மும்முரமாக தேர்தல் வேலைளில் ஈடுபட ஆரம்பித்துள்ளன. இந்நிலையில் நேற்று தனது தேர்தல் பிரச்சாரத்தை முதன் முதலாக மதுரையில் ஆரம்பிக்க வந்த மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் கொரோன கட்டுப்பாடு காரணமாக ஒலிபெருக்கியில் பேச தடை இருப்பதாக கூறி கைகளை கூப்பியும், அசைத்தும், தொண்டர்களின் ஆரவார வரவேற்பினை ஏற்றுக்கொண்டார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

முன்னதாக அவர் வருகையை ஒட்டி மிக ஆவலாக காத்திருந்த தொண்டர்களும், ரசிகர்களும் வரவேற்பிற்கான ஏற்பாடுகளை தடபுடலாக செய்திருந்தனர். திறந்த வெளி வாகனத்தில் பிரச்சாரம் மேற்கொண்டாலும் அரசின் விதிகளை காரணம் காட்டி கமலஹாசன் தேர்தல் குறித்து எதுவும் பேசாதது தொண்டர்களிடைய பெரும் ஏமாற்றத்தினை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம்.

அதன் பின்னர் காமராஜர் சாலையில் உள்ள வர்த்தக சங்கத்தில் வியூகம் -2021 என்ற தலைப்பில் நடந்த கலந்துரையாடலில் பங்குகொண்டு பேசிய கமலஹாசன் “வரும் சட்ட மன்ற தேர்தலில் மூன்றாவது அணி உருவாவதற்கான சத்திய கூறுகள் இருப்பதாகவும், மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் மதுரையை இராண்டாவது தலைநகரமாக மாற்றுவோம் “எனவும் தெரிவித்தார்.

மேலும் அவர், “நான் எம்.ஜி ஆர்- இன் நீட்சி, மாற்றத்தை உருவாக்குவோம் என்றும் கூறியுள்ளார். அவரது ஆழமான பேச்சை கேட்க ஆவலாக இருந்த தொண்டர்களுக்கு அவர் பேசாதது ஏமாற்றம் அளித்தலும் அவர் அளித்த வாக்குறுதிகள் நம்பிக்கையை தந்துள்ளன என்றே சொல்லலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here