Saturday, May 4, 2024

ஆந்திராவில் பரவும் மர்ம நோய் தமிழகத்தில் நுழையுமா?? அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்!!

Must Read

இந்தியாவில் கொரோனா பரவல் சற்று குறைந்துள்ள நிலையில் ஆந்திராவில் மர்ம நோய் ஒன்று பரவி வருகிறது. சுமார் 600-க்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் பலியாகியுள்ளனர். தற்போது தமிழகத்தில் அந்த மர்ம நோய் பரவலை தடுக்க நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மக்களை தாக்கும் மர்ம நோய்:

கொரோனா ஒரு பக்கம் உலக மக்களை மிரட்டிக் கொண்டிருக்கும் சூழலில் ஆந்திராவின் எலுரு நகரில் கடந்த 6-ம் தேதி முதல் மர்ம நோய் ஒன்று பரவி வருகிறது. மக்கள் வலிப்பு போன்ற அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 3 நாட்களிலேயே சுமார் 600 பேர் இந்த மர்ம நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மர்ம நோய்க்கு குடிநீரில் கலந்துள்ள பூச்சி கொல்லி மருந்துகள் காரணமாக இருக்கலாம் என எய்ம்ஸ் ஆய்வு குழு தெரிவித்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

minister vijayabasker
minister vijayabasker

இந்த மர்ம நோய் தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தாமல் இருக்க தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனை கதிரியக்கவியல் துறையில், ₹21 லட்சம் மதிப்பில், புற்றுநோயை குணப்படுத்தும் கருவியை சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று துவக்கி வைத்தார்.

அமைச்சர் பேட்டி:

அப்போது நிருபர்களிடம் பேட்டியளித்த அவர்,”மருத்துவ துறையில் இதுவொரு பொற்காலம். வெளிநாடுகளுக்கு இணையாக சர்வதேச தரத்தில் மருத்துவ கட்டமைப்பு தமிழகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு, கொரோனா காலங்களில் போர்க்கால அடிப்படையில் மருத்துவ கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது. அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் இதுவரை 3500 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். 98.04 சதவீதம் பேர் நோயில் இருந்து மீண்டுள்ளனர்”

டிச.20இல் தேர்தல் பிரச்சார ஆலோசனை கூட்டம் – முக ஸ்டாலின் அறிவிப்பு!!

“நவம்பர், டிசம்பர் மாதங்களில் கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கையானது 2 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது. அதாவது 1.7 சதவீதமாக குறைந்திருக்கும். கொரோனா காலத்தில் பணியில் சேர்ந்த செவிலியர்களுக்கு பணி பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுவதாக கூறுகின்றனர். இது தொடர்பாக அரசுடன் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதே போல் ஆந்திராவில் பரவி கொண்டு இருக்கும் மர்ம நோய் தமிழகத்தில் பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்” இவ்வாறாக கூறினார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

2024 TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான சிறந்த புக் மெட்டீரியல்., இது ஒன்னு போதும்? உடனே முந்துங்கள்!!!

2024 TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான சிறந்த புக் மெட்டீரியல்., இது ஒன்னு போதும்? உடனே முந்துங்கள்!!! தமிழக அரசுத் துறைகளில் பல்வேறு பணியிடங்களுக்கான 'குரூப்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -