Friday, April 26, 2024

பான், ஆதார் இணைக்கவில்லை என்றால் ரூ.10 ஆயிரம் அபராதம் – ஆன்லைனில் செய்வது எப்படி??

Must Read

நாட்டில் ஆதார் அட்டையின் முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் PAN அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்கவில்லை என்றால் பான் அட்டை செயல்படாது என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது.

அபராதம் விதிக்கப்படுவதற்கான காரணங்கள்:

மத்திய அரசு கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஆதார் அட்டையை அனைவர்க்கும் வழங்கியது. சாதாரண மனிதனின் அடையாளமாக இது கருதப்பட்டது. அனைத்து விதமான பதிவுகளுக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டது. இதனை அடுத்து நாம் பயன்படுத்தும் பான் கார்டையும் ஆதாரையும் இணைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

முன்னதாக, கொரோனா பரவல் காரணமாக பதிவு செய்யும் காலம் நீட்டிக்கப்பட்டது. தற்போது, மீண்டும் இணைக்க மார்ச் 31 ஆம் தேதி வரை இணையாக அவகாசம் விதிக்கப்பட்டுள்ளது. நீங்கள் இன்னும் உங்கள் ஆதாரையும் பான் கார்டையும் இணைக்கவில்லை என்றால் விரைவாக இணைக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். இவற்றை இணைக்கவில்லை என்றால் 10 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டும் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இரண்டையும் இணைக்க எளிமையான வழிகள் இதோ..

முதலில் சரிபார்த்து கொள்ளுங்கள்:
  • இதை சரிபார்க்க, வருமான வரித் துறையின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.incometaxindiaefiling.gov.in என்ற வலைதளத்திற்கு செல்ல வேண்டும்.
  • க்விக் லிங்கஸ் என்று கொடுக்கப்பட்டிருக்கும் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
  • புதிதாக தோன்றும் பக்கத்தில் அங்கு ஆதார் இணைப்பு குறித்த விவரங்கள் இருக்கும்.
  • அதனை கிளிக் செய்வதன் மூலம், நீங்கள் உங்கள் பான் மற்றும் ஆதார் விவரங்களை அதில் நிரப்ப வேண்டும்.
  • இதற்குப் பிறகு, அதில், வ்யூ லின்க் ஸ்டேடஸ் என்னும் ஆஃஷனை கிளிக் செய்தால், உங்கள் ஆதார் மற்றும் பான் இணைக்கப்பட்டிருக்கிறதா இல்லையா என்பது குறித்து நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
  • இந்த வழிமுறை இல்லை என்றால் சுலபமாக எஸ்எம்எஸ் வாயிலாகவும் இணைக்கலாம்.
எஸ்எம்எஸ் மூலம் இணைக்கும் முறை:
  • உங்கள் தொலைபேசியில், IDPN என டைப் செய்து, ஆதார் எண் மற்றும் பான் எண்ணை பதிவிடவேண்டும்.
  • இதனை 567678 அல்லது 56161 என்ற எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும்.
  • இதன் மூலமாக இணைக்கப்பட்டு விடும்.
ஆன்லைன் வாயிலாக இணைக்கும் முறை:
  • ஆதார் மற்றும் பான் அட்டையை ஆன்லைன் மூலமாகவும் சுலபமாக இணைக்கலாம். அதற்கு பின்பற்ற வேண்டியவை,
  • வருமான வரித் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  • உங்களுக்கு அதில் கணக்கு இல்லை என்றால், முதலில் உங்களுக்கு என்று ஒரு புதிய கணக்கினை தொடங்கி கொள்ளுங்கள்.
  • நீங்கள் பான், ஆதார் எண் மற்றும் பெயரை நிரப்ப வேண்டும். பிறகு பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு OTP வரும்.
  • OTP ஐ நிரப்பிய பிறகு, உங்கள் ஆதார் மற்றும் பான் இணைக்கப்படும்.
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? இம்முறை கோடை விடுமுறை நீடிக்குமா? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா, விளையாட்டு என கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகள் திறப்பு மற்றும் தேர்வு...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -