திருப்பதி பக்தர்களுக்கு ஹாப்பி நியூஸ் – தேவஸ்தானம் அறிவிப்பு!!

0

கொரோனா பரவல் காரணமாக சிறுவர்கள், முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் திருப்பதி தரிசனத்திற்கு அனுமதிக்காத நிலையில் தற்போது சில தளர்வுகள் அளித்து கொரோனா வைரஸிற்கான அரசு சொல்லும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு செல்லலாம் என தேவஸ்தானம் சார்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.

திருப்பதி ஏழுமலையான் கோவில்:

கொரோனா பரவல் காரணமாகக் கடந்த மார்ச் மாதம் 20-ம் தேதி முதல், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு தரிசனம் ரத்து செய்யப்பட்டது. அதன்பின் பல தளர்வுகளை அறிவித்த மத்திய அரசு தரிசனத்திற்கு அனுமதி அளித்தது. அனாலும் சில கட்டுப்பாடுகளை விதித்தது. அதன்படி கடந்த 9மாதங்களாக சிறுவர்கள், முதியோர் மற்றும் கர்ப்பிணிகளுக்கு மத்திய அரசின் நிபந்தனைகளின்படி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவர்களுக்கும் அனுமதி அளிப்பதாக டிசம்பர் 11 மாலை அறிவிப்பு வெளியிட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

Tirupathi
Tirupathi

அதன்படி ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் இனி ரூ.300 ஆன்லைன் சிறப்பு தரிசனம் மூலம் 10 வயதுக்கு உட்பட்டோர், 65 வயதுக்கு மேற்பட்டோர், கர்ப்பிணிகளும் கொரோனா நிபந்தனைகளைக் கடைப்பிடித்து திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய தேவஸ்தானம் அனுமதி வழங்கியது.

டிச.20இல் தேர்தல் பிரச்சார ஆலோசனை கூட்டம்!!

மேலும் முதியவர்களுக்கு தனியாக சிறப்பு வரிசைகள் எதுவும் கிடையாது என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தேவஸ்தான நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பக்தர்கள் தங்களது சுய விருப்பத்தின் பேரில் ஆபத்தின் தீவிரத்தை உணர்ந்து சாமி தரிசனத்திற்கு டிக்கெட்களை முன்பதிவு செய்ய வேண்டும். மத்திய அரசின் கோவிட்-19 வழிகாட்டுதல்களை மனதில் கொண்டு எச்சரிக்கையாக செயல்பட வேண்டும்” என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here