Friday, May 3, 2024

‘உச்சி முதல் உள்ளங்கால் வரை’ நோய் தீர்க்கும் ஒரே மருந்து – “குமட்டிக்காய்”ஆச்சர்ய தகவல்!!!

Must Read

நோய் இல்லாமல் வாழ்கின்ற மனிதன்தான் இன்றைய காலகட்டத்த்தில் கோடீஸ்வரன். ஏனென்றால் இன்றைய உலகில் நோய்கள் நிறைந்து உள்ளது. எவ்வளவு பணம் இருந்தாலும் ஆரோக்கியமான உடல்நலத்தை பணத்தை கொடுத்து வாங்க முடியாது. நமது உடலில் இருக்கும் பல்வேறு வகையான நோய்களை “குமட்டிக்காய் ” என்ற ஒரு பொருளை வைத்தே சரி செய்து விடலாம். இந்த காயில் அவ்வளவு மருத்துவ குணங்கள் உள்ளது.

குமட்டிக்காய் சிறப்புக்கள்:

குமட்டிக்காய் அல்லது குமிட்டிக்காய் என்று அழைக்கப்படும் இது ஒரு படர் கோடி வகை தாவரம் ஆகும். ஆற்றுத்தும்மட்டி, கொம்மட்டி, வரித்தும்மட்டி, பேய்க்கும்மடி போன்றவை இதன் வேறு பெயர்கள் ஆகும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இது தாவரங்களின் நடுவே கலைகளாய் முளைக்கக்கூடியவை. மெட்ரேனியன் மற்றும் ஆசியா இதன் தாய்நாடு ஆகும். ஆப்ரிக்கா, இஸ்ரேல், பாலஸ்தீனம் போன்ற நாடுகளில் அதிகமாக காணப்படும். தமிழகத்தின் மணற்பாங்கான இடங்களில் இது காணப்படும். மிகவும் வெட்டப்பட்ட இலைகளையுடைய தரையோடு வேர்விட்டுப் படரும் பேய்க்கும்மட்டி.

இதன் காய்கள் மிகுந்த கசப்பு சுவை கொண்டது. இது பச்சை, வெள்ளை வரிகளையுடைய காய்களாகும். இதன் காய்கள் சிறிய பந்து போல் இருக்க கூடியது. ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை வண்ணத்திலும் இது இருக்கும். இதில் அமிலத்தன்மை அதிகம் உள்ளன. இதன் விதைகள் மூலம் இது இனப்பெருக்கம் செய்கிறது.

இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம்!!

வேளாண்துறையிலம் ,சித்தமருத்துவத்திலும் இந்த காய் பூச்சி கொல்லியாக பயன்படுகிறது. இதன் காய், வேர், இலை இவை அனைத்துமே மருந்தாக பயன்படுகிறது. கால்நடைகளுக்கு இதை புல்லோடு சேர்த்து தீவனமாக கொடுப்பர்.

குமட்டிக்காயின் பயன்கள்:

  • பூச்சி வெட்டினால் ஏற்படும் தலைமுடிப் பிரச்சனைகளுக்கு குமட்டிக்காயை அரைத்து தேய்த்து வந்தால் பூச்சிவெட்டு மறந்து தலை முடி மிகவும் நன்றாக வளரும். வழுக்கை தலையில் கூட முடியை மீண்டும் வளர வைக்கும் தன்மை இந்த குமட்டிக்காய்ல் உள்ளது.
  • தலைமுடியில் ஏற்படும் ஏற்படும் அரிப்பு, பொடுகு போன்ற பிரட்சனைகளுக்கும் குமட்டிக்காய் மருந்தாக செய்யப்படுகிறது.
  • வழுக்கு குமட்டிக்காயின் இலையை அரைத்து வீக்கம், வலி உள்ள இடங்களில் தடவி வந்தால் விரைவில் குணமடையும்.
  • அம்மைக் கொப்புளங்கள் உள்ள இடங்களில் இந்த காயின் விதையை, அருகம்புல்லுடன் இணைத்து தடவி வந்தால் அம்மைக் கொப்புளங்கள் விரைவில் குணமடையும்.
  • வயிறுவீக்கம், வாயு பிரச்சனை நீக்கும்.
  • பெண்களுக்கு ஏற்படும் கருப்பை சார்ந்த பிரச்சனைகள் மற்றும் நீர்க்கட்டிகள் போன்ற நோய்களுக்கு சிறந்த நிவாரணியாக செயல்படுகிறது.
  • குதிகால் வலி உள்ளவர்கள் இந்த காயை அடுப்பில் வைத்து சூடு செய்து பின்னர் ஒரு தேங்காய் சிரட்டையில் அதை வைத்து காலால் அழுத்தவும். இதனால் அதன் சாறு காலில் பட்டு குதிகால் வலியை சரிசெய்கிறது.

இவ்வளவு மருத்துவ குணங்கள் உள்ள குமட்டிக்காயை நாமும் பயன்படுத்தி அதன் நன்மைகளை பெறுவோம்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

TNPSC Group 4 பொதுத்தமிழ் கேள்விகளும் பதில்களும்

https://www.youtube.com/watch?v=vGmXZU8sGu0  Enewz Tamil இன்ஸ்டாகிராம்
- Advertisement -

More Articles Like This

- Advertisement -