Tuesday, April 30, 2024

Work From Home முடிவிற்கு வருகிறது – மாநில அரசு அறிவிப்பு!!

Must Read

வீட்டிலிருந்தே வேலை செய்யும் முறை முடிவுக்கு கொண்டுவரப்போவதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது. ஐடி நிறுவனங்களில் வேலை செய்யும் மற்ற பணியாளர்களின் வாழ்வை கருத்தில் கொண்டு இம்முடிவை எடுத்துள்ளது கர்நாடக அரசு.

ஒர்க் ஃப்ரம் ஹோம்:

நாடு முழுவதும் கொரோனா நோய்பரவல் காரணமாக வீட்டில் இருந்த படியே வேலை செய்யும் முறை நடைமுறைக்கு வந்தது. இதனால் ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் வீட்டிலிருந்தே தங்களது லேப்டாப், கணினி மூலம் வேலை செய்தனர். ஊரடங்கு காலத்தில் ஊழியர்கள் 50% மட்டுமே நிறுவனங்களுக்கு சென்று வேலை பார்த்தார்கள். ஊரடங்கில் தளர்வுகள் வந்த நிலையிலும் இன்றும் வீட்டிலிருந்தே பலர் வேலை செய்கிறார்கள். இந்நிலையை நிறுத்தி அலுவலகங்களுக்கு சென்று வேலை செய்ய வேண்டும் என்று கர்நாடக அரசு வலியுறுத்துகிறது.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

உடுப்பி எம்.எல்.ஏ திரு. கே. ரகுபதி பாட் ஐடி போன்ற பெரிய நிறுவனங்களின் வேலை செய்யும் ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை பார்ப்பதால் அங்கு வேலை பார்க்கும் மற்ற ஊழியர்களான துப்புரவு தொழிலாளர்கள், கேப், சிற்றுண்டி உணவு வைத்திருப்பவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே இந்த முறை நிறுத்தி வழக்கம் போல் அலுவலகங்களுக்கு சென்று வேலை பார்க்கும் முறை நடைமுறைப்படுத்த வலியுறுத்தப்பட்ட வேண்டும் என்றார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் ‘டபுள் எவிக்ஷனில்’ வெளியேறும் நபர் இவரா?? ஷாக்கான ரசிகர்கள்!!

இது பற்றி சட்டமன்றத்தில் விளக்கம் அளித்துள்ள கர்நாடக மாநில துணை முதல்வரும், தகவல்தொழில்நுட்பத் துறை அமைச்சருமான சி.என் அஸ்வத் நாராயண், ஒர்க் ஃப்ரம் ஹோம் நடைமுறையை முடித்துக் கொண்டு அலுவலகங்களை திறக்க வேண்டும் என்று அறிவுறுத்தவில்லை, அத்தியாவசியப் பணிகளுக்காக அலுவலகங்கள் திறந்திருக்கலாம் தேவைப்படும் போது ஊழியர்கள் அலுவலகங்களுக்கு வரலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அரசைப் பொறுத்தவரை தற்போது அலுவலகங்களுக்கு வந்து பணியாற்றும் நிலை இல்லை என்று தெரிவித்தார். மேலும் தற்போது ஒர்க் ஃப்ரம் ஹோம் சரியானது. மேலும், டிசம்பர் 31 வரை ஐடி மற்றும் பிபிஓ ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்யலாம் இதற்கான தொழில்நுட்ப வசதிகளை செய்து தர வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

T20 உலக கோப்பை 2024: மே மாதத்தில் அமெரிக்கா செல்லும் இந்திய அணி.. முழு விவரம் உள்ளே!!

இந்தியாவில் IPL தொடரின் 17வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதை நாம் அறிவோம். இத்தொடருக்கு பிறகு வரும் ஜூன் மாதம் 2ம் தேதி முதல் T20...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -