Friday, May 17, 2024

8 மாவட்டங்களில் அதீத கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை மையம் எச்சரிக்கை!!

Must Read

தற்போது ஒரு இடத்தில் “நிவர்” புயல் 3 மணி நேரமாக மையம் கொண்டுள்ளது என்றும் காற்றின் வேகம் மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் கூட வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதே போல் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 7 மாவட்டங்களுக்கு அதிதீவிரமான கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயல் எச்சரிக்கை:

கடந்த சில நாட்களுக்கு முன் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி “நிவர்” என்ற புயலாக மாறியுள்ளது. இந்த புயல் தற்போது புதுச்சேரியில் இருந்து 410 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையில் தென்கிழக்கு அருகே 450 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. இதனை அடுத்து இன்னும் 24 மணி நேரத்தில் புயல் அதிதீவிரமாக புயலாக உருவெடுக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. காரைக்கால் – மாமல்லபுரம் மற்றும் புதுச்சேரி அருகே “நிவர்” புயல் கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

இதன் காரணமாக இன்றே வங்கக்கடல் கொந்தளிக்க ஆரம்பித்து விட்டது. அதே போல் இன்று ஒரு இடத்தில் புயல் 3 மணி நேரமாக மையம் கொண்டுள்ளது. இதனால் புயல் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளை கடக்கும் போது பலத்த சூறாவளி காற்று 150 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக கடல் சீற்றத்துடன் இருப்பதால் கரைக்கு அருகே உள்ள படகுகள் சேதம் அடைந்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த புயல் எச்சரிக்கை காரணமாக இன்று மற்றும் நாளை திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், அரியலூர், காரைக்கால், புதுச்சேரி, பெரம்பலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய 8 மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறுகையில், “புயல் மிகவும் தீவிரமான நிலையில் உள்ளது. இதனால் காரைக்கால் மற்றும் புதுச்சேரி பகுதிகளை கடக்கும் போது பலத்த காற்றுடன் கடக்கும். மக்கள் கவனமுடனும் எச்சரிக்கையுடனும் இருப்பது அவசியம்” இவ்வாறாக தெரிவித்துள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு., இந்த தேதி வரை விண்ணப்பிக்கலாம்? வெளியான அறிவிப்பு!!!

தமிழக தொடக்க கல்வி மற்றும் பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, ஆண்டுதோறும் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நடப்பு 2024-25 ஆம் கல்வியாண்டில்,...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -