நான் அர்ச்சனா அக்கா இல்ல, அர்ச்சனா மட்டும் தான் – உண்மை முகத்தை வெளிக்காட்டிய பிக்பாஸ்!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் பல சண்டைகள் உருவாகிக்கொண்டு தான் வருகிறது. மேலும் அர்ச்சனா வழக்கம் போல நிஷா, சோம், ரியோ போன்றவர்களை கைவசம் வைத்து கொண்டு குரூப்பிஸம் நடத்தி வருகிறார். தற்போது ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.

பிக் பாஸ் சீசன் 4

பிக் பாஸ் நிகழ்ச்சி  தற்போது 50 நாட்களை கடந்து பயணமாகி கொண்டுள்ளது. இந்நிலையில் போன வாரம் முழுவதும் பல கடினமான டாஸ்கை கொடுத்து போட்டியாளர்கள் வெயில், மழை என பாராது வெற்றிகரமாக செய்து முடித்தனர். மேலும் போன வாரம் சுசி வெளியேறினார். போட்டியாளர்கள் பற்றிய கருத்துக்களை கேட்டதற்கு அனைவரின் உண்மை முகத்தையும் போட்டுடைத்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அர்ச்சனா சோமை பொம்மை போல வைத்திருப்பதாகவும், நிஷா போலியான நபர் என்று கூறியிருந்தார். இதனை கேட்ட அனைவருக்கும் ஷாக் என்றே சொலலலாம். சரி இந்த வாரம் புது டாஸ்க் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு விஜய் டிவி ப்ரோமோவை வெளியிட்டுள்ளது. அதில் இந்த வாரத்தில் கால் சென்டர் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

அதில் ஒரு டீம் கால் சென்டரில் வேலை பார்ப்பார்கள். மற்றொரு டீம் அவர்களுக்கு கால் செய்து என்ன கேள்வி வேண்டுமானாலும் கேட்கலாம். கேள்விகளுக்கு வரைமுறை எதுவும் கிடையாது. கால் சென்டர் டீமில் சம்யுக்தா, பாலாஜி, கேபி ஆகியோர் உள்ளனர்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் அர்ச்சனா பாலாஜிக்கு கால் செய்கிறார். பாலாஜியிடம் நேற்று நீங்கள் நேற்று 3 பேரை முன்னிறுத்தி என் விளையாட்டை விளையாடுகிறேன் என்று சொன்னீர்கள். அந்த மூன்று பேரை நான் தெரிந்து கொள்ளலாமா?? என்று கேட்க பாலாஜி அதற்கு சிறிதும் தாமதிக்காமல் சோம், ரியோ மற்றும் கேபி என்று கூறுகிறார்.

மேலும் அடுத்த ப்ரோமோவில் பயங்கரமாக சண்டை வெடிக்கிறது. கேபிக்கும் பாலாஜிக்கு இடையே ஏதோ நடந்துள்ளது. அதற்காக கேபி பாலாஜியிடம் சண்டையிடுகிறார். அந்த சமயம் பாலாஜி அர்ச்சனா அக்கா கேபியை நாமினேட் செய்ய என்று ஏதோ சொல்ல வர அர்ச்சனா திடீரென கத்துகிறார்.

நான் அர்ச்சனா அக்கா கிடையாது. வெறும் அர்ச்சனா தான் என்று கூறி செல்கிறார். பாலாஜியும் சரி அர்ச்சனா என்று மூஞ்சியில் அடித்தார் போல சொல்கிறார். இதை வைத்து பார்க்கும்போது இன்றைய எபிசோடில் பல சம்பவங்கள் நமக்காக காத்திருக்கிறது என்று மட்டும் தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here